பக்கம்:தாய் மண்.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

143

கள் படபடத்தன. மனத்தின் உட்புறத்தில் கொதிப்பு எழுந்தது.

‘நீங்க நெருப்பு என்று கேள்விப்பட்டேன். அதுதான் உங்க கையிலே நெருப்புக் கேட்டுப் பார்த்தேன்!” என்று நையாண்டிச் சிரிப்பை வழிய விட்டவகை, ஒதுக்கமாக நின்ற ஜலஜாவைப் பார்த்துக் கண்களை வேறு சிமிட்டினன்.

அவ்வளவுதான்!-தமிழரசி தீயானுள். “ஒஹோ! அப்படிங்களா? நெருப்பு வேனுங்களா? இந்தாங்க!’ என்று சொல்லிக் கொண்டே, கைப் பையை இடது கையில் மாற்றிக் கொண்டு, அவனை நோக்கி நகர்ந்து ஓங்காரமாகச் சோற்றுக் கையை ஓங்கினுள். பத்திரகாளி இப்படித்தான் இருப் பாளோ? அவளது பற்களும் கைவிரல் நகங்களும் துருதுருத்தன.

அப்புறம், ஏன் நிற்கப் போகிருன் அந்தத் தடியன்? தமிழரசி சுற்றிச் சூழ நோக்கினுள். இருவரும் கடலே கதி’ என்று எங்கோ ஓடிவிட்டார்கள். ஆம்; ‘ஒடி’ விட்டார்கள். ஒருகால், கடலே கதி என்று போயிருக்கலாமோ? இவர்கட்குக் கதி தர கடலுக்கு ஒன்றும் பைத்தியம் இல்லை.

அவள் பார்வைக்கு அடையாளம் வைத்தாள் சாவித்திரி. “ஸ்கூலிலே படிக்காத ரெளடி போலிருக்கிறது. அழகாகப் பாடம் சொல்லிக் கொடுத்தீங்க!’ என்று மெச்சினுள் அவள். “ஒரமாக நின்று எல்லாவற்றையும் பார்த்துக்கிட்டிருந் தேன்!”

கொஞ்சப் பொழுதில் ஏதோ சலசலப்புக் கேட்டது. ஜலஜாவுடன் வந்த அந்தப் போக்கிரியின் தீய போக்கை மறைந்திருந்து கவனித்துக் கொண்டிருந்த தில்லைக் கூத்தன் அவனுக்குப் பிரத்தியட்சமான பாடத்தைத் போதித்துக் கொடுத்துவிட்டான். தமிழரசி செய்யவிருந்த கடமையை அவனே செய்துவிட்டுப் போனன். பாவம்! அந்தப் பைத்தி யத்தின் முகம் பழுத்து விட்டது!...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/143&oldid=663949" இலிருந்து மீள்விக்கப்பட்டது