பக்கம்:தாய் மண்.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144

தமிழரசியும் சாவித்திரியும் செம்புதாஸ் தெருவை மறித்து, அரண்மனைக்காரத் தெருவை மிதித்தார்கள். “தீமைகள் மலிகிறபோது, கண்ணன் தோன்றுவாளும். அப்படித் தோன்றும் தெய்வம்தான் நமக்கு வீரத்தை அளிக் கிறது. பெண் எடுக்க வேண்டிய அவதாரம் ஒன்றா, இரண்டா?’ என்றாள் தமிழரசி,

வீட்டில் தமிழரசியைச் சற்று முன்னதாகத் தேடிப் பார்த்துத் திரும்பியிருக்கிருள் சாவித்திரி. வழியில் தமிழரசி யைச் சந்திக்கவும் முடிந்தது.

வீட்டுக்கு அவளை இப்போது அழைத்தாள் தமிழரசி. இருவரும் நடந்து சென்ற வழியில் பின் தொடர்ந்து வந்த சுசீலா, தமிழரசியை விளித்து, உடனடியாக அவள் தன்னுடன் வரவேண்டுமென்று கேட்டுக் கொண்டாள்.

பஸ்ளில் ஸ்ரீமான் சொக்கநாதன் அவர்களைப்பற்றிப் “பொழிப்புரை செய்த ஒல்லிப்பாவை அவள் என்று இனம்” கண்டு கொண்டாள். சாவித்திரியிடம் வீட்டுச் சாவியைக் கொடுத்தாள். நீங்க வீட்டிலே போய் இருங்க” என்றாள், சாவித்திரி சாவியை அவளிடமே திருப்பிக் கொடுத்தாள். மீண்டும் வந்து அவளை வீட்டில் சந்திப்பதாகச் சொல்லிப் பிரிந்தாள்.

“இந்தப் பெண் சுசீலா என்னை ஏன் அழைக்கிருள்?” என்ற கேள்வியைத் தனக்குள் கேட்டுக் கொண்டே, வேண்டா வெறுப்புடன் சுசீலாவைத் தொடர வேண்டியவள் ஆனுள், தமிழரசி. - -

ஆயாள் சந்திப்பு

பதினேழு

  • நியாயமான ஆசைகள் கட்டாயம் நிறைவேறியே தீரும் என்பதற்கு நிகராகத்தான் அந்தச் சந்திப்பு வாய்த்தது. சுசீலாவுடன் வேண்டா வெறுப்புடன் சென்ற தமிழரசியின் கண்கள், அவளே மழலைப் பிராயத்தில் சீராட்டிப் பாராட்டி
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/144&oldid=663950" இலிருந்து மீள்விக்கப்பட்டது