பக்கம்:தாய் மண்.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

145

வளர்த்த ஆயாளைத் தரிசித்தன. அவளுக்கு உண்டான உள்ளக்களிப்பு கரை உடைந்தது. இதயத்தில் மோதி வழிந்த மகிழ்வின் நீர்தான் கண்களுக்குள் மடை மாற்றிப்

பாய்ந்திருக்க வேண்டும்.

“என்னைத் தெரியுதா அம்மா?’ என்று நைந்த குரலில் கேட்டாள்; பிய்ந்த பாயில் படுத்திருந்தவள், கஷ்டப்பட்டு எழுந்து உட்கார்ந்தாள் அந்த முதுபெருங் கிழவி. அக் கேள்வி அவளைச் சுட்டிருக்க வேண்டும். ஏன் ஆயா அப்படிக் கேட்கிறீங்க? உங்களைத் தெரியாமல் இருக்குமா ஆயா? ரொம்பத் துரும்பாய்ப் போய்ட்டீங்களே!’ என்று கேட்டு விட்டு, அவளது ஈர்க்குச்சிக் கைகளைத் தொட்டுத் தடவிக் கொடுத்தாள். இடுக்கு விழுந்து, பார்வையின் பொருள் தப்பிப் பதுங்கிக் கிடந்த கண்கள் சிந்திய கண்ணிரை அவள் துடைத்தாள். அப்பொழுது, அவள் கண்கள் நீரைப் பொழிந்தன. சில துளிகள் தடுமாறி, கிழவியின் முழங்கை களில் சிதறின. ‘என்னும்மா இது?’ என்று நாக்குழறக் கேட்டாள். t -

‘உங்க கண்ணிர் ஆயா?’ என்றாள் தமிழரசி, “அன்பு தானகவே உணர்த்தப் படவேண்டும்; அன்புக்கு வேடம் கூடாது. அப்படிப் புனைவடிவம் ஏற்றால், அது அன்பல்ல!” என்பதாகக் கோகலே ஹாலில் மாதர் கலைக் கழகம்’ ஒன்றின் சார்பாகப் பேசியபோது குறித்த ஒரு கருத்தை உரைத்துப் பார்க்க விழைந்தாள். கிழிந்த பாயின் ஒரம் அவளுக்குக் கருணை காட்டியது.

‘இல்லேம்மா, எனக்காக நீ கண்ணிர் சிந்தியிருக்கே! இதுதாம்மா எனக்கு ரொம்பவும் ஆறுதல். என்னை நினைக் கிறதுக்கும் ஒன்றிரண்டு உள்ளங்கள் இந்தப் பயங்கர உலகத் திலே இருக்கு என்கிறதை நினைப்பதுதான் அம்மா எனக்கு திம்மதி. இதுவும் இல்லாட்டி நான் செத்த இடம் எப்பவோ பூண்டு முளைச்சுப் போயிருக்குமே! இந்தப் பேத்திப் பொண்ணு தான் உன்னைப்பத்தி சமீபத்திலே சொல்லிச்சு. உடனே அது நீயாகத்தான் இருக்க வேணும்னு ஒரு திடம் எனக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/145&oldid=663951" இலிருந்து மீள்விக்கப்பட்டது