பக்கம்:தாய் மண்.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146

உண்டாச்சு. வழியிலே கண்டால் அழைச்சிட்டு வரச்சொல்வி யிருந்தேன்!’ கிழவிக்கு மூச்சு வாங்கியது. இரைப்பு. எடுத்தது.

ஹைதர் காலத்திய வீடு அது. அதற்காக ஹைதர் அலி சரித்திரத்தின் மக்கிய ஏடுகளிலிருந்து பிழைத்தெழுந்து அந்த வீட்டுக்குப் பாத்தியதை கொண்டாடச் சட்டம் இடம் தரமுடியாது. வீடு பழசு. அதில் இவர்கள் ஒட்டுச் குடித்தனம், உள்ளே சிதிலமடைந்திருந்த பகுதிகள் கூடுதல். அங்கு யாரோ ஒர் இளம் தம்பதி குடி இருந்தார்கள். அவர் கள் இருவரும் சீவிச் சிக்கெடுத்துச் சிங்காரித்துக் கொண்டு “காற்று வாங்கப் புறப்பட்டுக் கொண்டிருந்தார்கள். காற்று வாங்கப் பணமும் எடுத்துச் சென்றிருக்க வேண்டும்.

தமிழரசி எழுந்தாள். ஆயாளுக்குப் பழங்கள் வாங்கிக் கொடுக்க விரும்பினுள்.

அதற்குள் குறிப்பறிந்த சுசீலா ஒயில் சேர்த்து, அவள் குந்தியிருந்த கள்ளிப் பெட்டியை நீக்கி எழுந்தாள். அன்றைக் குப் பஸ்ஸில் பார்த்த அலங்காரத்தில் நூலிழை மாற்றுக் குறையவில்லை. அவளேயும் அந்த வீட்டுப் பகுதிச் சூழ்நிை யையும் மாறிமாறிப் பார்த்தாள் தமிழரசி. அவள் வற்புறுத் தியதன் பேரில், அவளிடம் சில்லறை கொடுத்தனுப்பினள்.

‘அம்மா!’ என்று தமிழரசியைக் கூப்பிட்டான் ஆயாள்.

‘இதோ இருக்கேன்!’ “என் பேத்தி எங்கே, காளுேம்?” ‘கடை வரைக்கும் போயிருக்கு! வந்திடும்!” “ம்” என்று பெருமூச்சுக் கழித்தாள் ஆயா. “காலம்பற உங்க போட்டோவை என் ஆல்பத்திலிருந்து. எடுத்துப் பார்க்கிற சந்தர்ப்பம் ஏற்பட்டுச்சு. அப்போதிலி ருந்து உங்களைப் பத்திதான் ஞாபகம்!”

கிழவி பொறுக்கவில்லை. “அப்படின்ன, இதுக்கு முந்தி இந்த ஆகான மறத்திட்டயா தமிழரசி?’ என்று கேட்டுவிட்டான். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/146&oldid=663952" இலிருந்து மீள்விக்கப்பட்டது