பக்கம்:தாய் மண்.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

147

“ஐயையோ! அப்படிச் சொன்ன, அது தர்மம் ஆகாது. ஆயா. உங்களேச் சதா நினைச்சுக்கிட்டுத்தான் இருப்பேன். ஆன உங்களே வந்து பார்க்கிறதுக்கு உங்க இருப்பிடம் இப்பத் தானே தெரிஞ்சுது? உண்டு உறங்கிக் கண்ணே மூடுற இந்தப் பொய்யான வாழ்க்கையிலே அன்பும் பாசமும்தானே உண்மை? அந்தப் பாசத்தையும் அன்பையும்தான் எனக்கு. வேதமாக மதிக்கப் பழகியிருக்கிறவள் நான். உங்களை நான் மறந்திடுவேன ஆயா!’ என்று குரல் கம்மக் கேட்டாள். “ஆமா, சுசீலா உங்களுக்குச் சொந்தப் பேத்தியா?’ என்று தொடர்ந்தாள்.

“சொந்தப் பேத்தியா இல்லாட்டியும் எட்டத்துப் பேத்தி. தெற்கத்திச் சீமையிலே பிறந்தது. அப்பன் ஆத்தா இல்லாத பொண்ணு. பம்பாயிலே இதுமட்டும் வளர்ந்து வாழ்ந்திருக்குது. காலமும் ஓடிடுச்சு. ஆளு, உடம்பு எப்பவும் ஒத்துப்போய் ஒட முடியுமா? அதுக்குச் சீக்கு வந்து தட்டுத் தடுமாறி எப்படியோ என்னைக் கண்டிடுச்சு, அதுகூட. பகவான் அனுக்கிரகமாத்தான் இருக்கும். போன மாசம் வரை நான் அதுக்கு நிழலாக இருந்தேன். இப்ப அது ஒரு கம்பனியிலே வேலைக்கு இருக்குது... அதுக்கு ஜல்தியிலே ஒரு கால்கட்டுப் போட்டுப்புட வேணும்!”

அவளுக்கு அதற்கு மேல் பேசுவதற்குத் திராணி ஊறினுல்தானே?

செங்காங்கடை பஜாரிலிருந்து மிதந்து வந்த சினிமாப் பாட்டு ஒன்று காதுச் சவ்வுகளைத் தாக்கியது. -

சுசீலாவும் தாழம்பூவும் அவள் மனத்தில் ஒன்றுக்கொன்று இணைப்பான விந்தையை அவள் உணர்வு ஏந்தியது.

ஏந்தி வந்த பழங்களையும் ரொட்டியையும் ஏந்திழை. யிடம் கொடுத்தாள் சுசீலா. சாத்துக்குடிப் பழங்கள் கை மாறின. ஒரு பழத்தை உரித்துச் சுளை உடைத்து கொட்டை நீக்கிக் கிழவியின் வாயில் வைத்தாள். நாளெல்லாம் இப்படியே தொண்டு செய்துகொண்டே இருக்கலாம் போல.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/147&oldid=663953" இலிருந்து மீள்விக்கப்பட்டது