பக்கம்:தாய் மண்.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148

ஒரு பிரமையும், நாளெல்லாம் இப்படியே செய்துகொண்டே இருக்க வேண்டுமென்ற ஒரு தவிப்பும் அவளுள் சுழன்றன. “எனக்கு அன்னே இருந்தால்-அப்பா இருந்தால் நான் அவர்களே என் கண்களில் வைத்து இமைகளால் மூடிக் காப்பேன், அதேபோல, அவர்கள் என்னையும் காப்பார் களே!... அத்தகைய பேறு இருதரப்பிலுமே பூஜ்யமாகிப் போனதே!... தெய்வமே!’ என்று அவள் மனம் புலம்பும் நேரங்களிலெல்லாம் அவளுக்கு ஒரு பிடிப்பாகத் தோன்றி பவள் தலைவியே அல்லவா? அன்பு செய்திடல் வேண்டும்’ என்று ஆணே பிறப்பித்த மண் இது!

சொக்கநாதன் அவர்களைப் பற்றிச் சுசீலா ஒரு சமயம் பஸ்ஸில் சொன்ன விவரங்களின் உண்மை நிலையை இப்போது அறிய முற்பட்டாள், தமிழரசி. சொக்கநாதனைப் பற்றிய கதையைத் தனக்குத் தன் பாட்டி சொன்னதாகச் சுசீலா தெரிவித்திருந்தாள். அந்தப் பாட்டி இந்த ஆயாளாகத்தான் இருக்கும் போலிருக்கிறது!...

செல்வச் சீமான் சொக்கநாதன் தன் பேரில் அளவு கடந்த பாசமும் அன்பும் அக்கறையும் கொண்டிருப்பதாகச் சமயம் நேரும்போதெல்லாம் இல்லத்தாய் நினைவுபடுத்தி வந்ததை இப்போது தமிழரசி நினைவிற் கொண்டாள். அவள் பூரணமாக அறிந்திருந்த தலைவியின் அன்பைப் போலவே, அவள் பூரணமாக அறிந்திராத சொக்கநாதனின் அன்பும் அவளுக்கு மிகுந்த ஆறுதலைக் கொடுத்தன. தன் பேரிலும் அன்பு சொரிய ஆண்டவனுக்குத் துணையாக மேலும் சில மனங்கள் இப்பரந்த உலகத்திலே இருக்கின்றன என்னும் உண்மையை அவள் நெஞ்சில் வாங்கிச் சிந்தித்த போழ்தில், அவளுக்கு அந்த உண்மையை வாழ்த்தி மகிழ வேண்டுமென்ற ஆசை வந்தது. அந்த உண்மைக்கு உருவம் சமைத்து நின்ற வர்களுக்கு மத்தியில் இராணுவ வீரன் மோகன்தாஸ் கம்பீரமாகத் திகழ்ந்தான். மனக்கண் சித்திரித்த அக்காட்சி அவளுக்குக் கனவு போலவும் உணர்வு காட்டியது. கனவின் சுகத்தில் திளைத்தவளாக ஒன்றிரண்டு நிமிஷங்களைக் கடத்தினள். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/148&oldid=663954" இலிருந்து மீள்விக்கப்பட்டது