பக்கம்:தாய் மண்.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

149

அப்போது, ‘அம்மா!’ என்று கூப்பிட்டாள் ஆயான். தொண்டை கட்டிவிட்டது.

‘இதோ இருக்கேன் ஆயா! பிஸ்கட் சாப்பிடுங்க. இனி நாளேக்குக் காலம்பற பழம் சாப்பிடலாம். இப்போ வேணும். கூதல் காலம்!” என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே, தன்னுடைய பிறப்புப் பற்றியும், தன்னுடைய பெற்றாேர் களைப் பற்றியும் ஏதாவது கிழவி அறிவாளோ என்கிற விவரத்தைக் கேட்டறிந்து கொள்ளலாமே என்ற தவிப்பு விடிைக்கு வினடி மேலோங்கி வந்தது. பரீட்சை முடிவை அறிய, பரீட்சை முடிவுகள் வெளியாகியுள்ள பத்திரிகையை வைத்துக் கொண்டு பயமும் ஆர்வமும் சூழத் தயங்கி நிற்கும் மாணவியைப் போல அவள் தவிப்பு அடைந்தாள். பாங்கர் சொக்கநாதனைப் பற்றியும் கேட்டுப் பார்த்துவிட வேண் L-fr dir?

சுசீலா உள்ளே காபி போட்டுக் கொண்டிருந்தாள்.

“ஆயா!’

‘சொல்லும்மா!’

‘சொக்கநாதன் இருக்கிருரே, அவரை உங்களுக்குத் தெரியுமா?”

“ஓ... அந்த மனிதரா? தெரியுமே!... மாம்பலத்துச் சீமான்தானேம்மா?...’

“ஆமாம்!”

“நான் சாந்தோம் கஸ்தூரி காந்தி அைைத இல்லத்திலே, வேலைக்கு இருந்தப்ப, அவரைத் தெரிஞ்சுக்கிட்டேன். இல்லத்தை வளர்த்து வருகிறவங்களிலே அவரும் ஒருத்தர். இப்போ எப்படியோ, அந்த நாளையிலே அவரைப் பத்தி நல்ல அபிப்பிராயம் இருந்தது கிடையாதம்மா!... நம்ம மதர் திலகவதி அம்மாகூட அவர்கிட்டே ரொம்பக் கவனமாத். தான் இருப்பாங்க! பணக்காரங்க இருக்காங்களே அம்மா, அவுங்க ஒரு தனி ஜாதி. எப்பவும் ஒதுங்கியேதான் இருப் பாங்க. அந்தச் சாதி நம்மளோட ஒட்டாது. நாமும் அவுங் களோட ஒட்ட முடியாதும்மா...'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/149&oldid=663955" இலிருந்து மீள்விக்கப்பட்டது