பக்கம்:தாய் மண்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#5

தங்கப்பதக்கம் ஞாபகப்படுத்திக் காட்டியது. கண்காணும் தெய்வம் எங்கள் மதர்... எங்கள் தாய்!... கஸ்தூரி அன்னை

அளுதை இல்லத்தின் தலைவி தந்த ஈடில்லாப் பரிசு இது!...”

படிப்பறைக்கு வந்தாள் தமிழரசி.

அறிஞர் அண்ணுதுரை, அமரர் ஜீவா ஆகியோரின் எழுத்தோவியங்கள் பளிச்சிட்டன.

திரும்பினுள்.

அன்பும் தியாகமும் சுடர் தெறிக்க, ஊதுவத்தியின் நறுமணத்தில் திளைத்தவாறு, கஸ்தூரி அன்னே அனுதை இல்லத் தலைவி திலகவதி அம்மையார் இளநகை சிந்திக் கொண்டிருந்தாள் - அந்தப் புகைப் படத்திலே! தவழ்ந்து கொண்டிருந்த நறுமணத்தில் இறைமணம் கூடி மணத்த தாகவே அவள் நம்பினுள்: மனப்பூர்வமாக நம்பிய உண்மை அல்லவா அது?

அவள் மனம் திறந்து, விழி மூடி, கரங்குவித்து வணங் கிளுள்: ‘அம்மா!... அம்மா!...”

வினுடிகள் சில ஊர்ந்திருக்க வேண்டும்,

அவள் கண்களைத் திறந்தாள். சேலை முன்றானே அவளது விழி முனைகளை நாடி மீண்டது.

இனிமேல், அவள் புறப்பட்டு விடவேண்டும்! மேஜைமீதிருந்த பேணுவையும் பர்ஸையும் எடுத்தாள்; பேளுவை ரவிக்கையின் உட்புறமாகச் செருகிக் கொண்டாள்; பர்ஸை உட்புறம் போட்டுக் கொண்டாள். புத்தகங்களை ஒழுங்காக அடுக்கி எடுத்து இடது புறக் கைக்குள் அடக்கி, விரல்களின் பிடிக்குள் அவற்றைக் கட்டுப்படுத்திஞள். அன்றைச் செய்தித்தாளேயும் நாட்குறிப்பையும் இணைத்தாள். அவை மார்புடன் இணைந்தன.

கதவைப் பூட்டிக்கொண்டு தமிழரசி புறப்பட்டாள். கை வளைகள் குலுங்கி விழுந்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/15&oldid=663956" இலிருந்து மீள்விக்கப்பட்டது