பக்கம்:தாய் மண்.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150

தூரத்துப் பார்வையில் காதில் விழுந்த ‘பராபரிச் செய்தி களை முடி அவிழ்த்துப் பார்த்துச் சொன்னுள் ஆயாள். அவ னக்கு வெள்ளெழுத்து. தடுமாறினுள்,

அன்னே கஸ்தூரி இல்லத்தலைவி திலகவதி அம்மையாரின் தாண்டுதலால், தன் மனத்தில் அன்புத் தருவாகத் தானே வளர்ந்து நின்ற சொக்கநாதனைச் சாய்ந்துவிடாமல் பார்த்துக் கொண்டாள். தமிழரசி. பிறகு, மறு கேள்விக்கு வந்தாள் அவள்.

இன்னமும், சுசீலா காபித் தயாரிப்பில்தான் இருந் தாள். காபியில் சுவை பட்டாலும் படாவிட்டாலும், அவளது மெல்லிய விரல்களின் வெளுத்த நகக்கண்களில் அப்படிப்பட்டிருந்த நகச்சாயத்தில் அழுக்குப் படாமல் இருக்கவேண்டும், பாருங்கள்!

“ஆயா, நான் பச்சைக் குழந்தையாய் இருந்தது தொட்டு நீங்க என்னை வளர்த்திருக்கீங்க. அப்படித்தானே?” ‘'நீ பிறந்த முப்பது நாளைக்கெல்லாம் இல்லத்துக்கு வந் திட்டாய். அதிலிருந்து இல்லத்திலேதான் நீ வளர்ந்ததே. சொக்கநாதன் அவர்கள்தான் உன்னைப் பெரிய ஆஸ்பத்திரி லேருந்து எடுத்து வந்து தலைவி திலகவதி அம்மா வசம் கொடுத்தாராம். மதர் உன்கிட்டவே தன் ஒய்வையெல்லாம் கழிச்சாங்க. பச்சை மண் வாடை மாரும வந்த குழந்தை தீதாம்மா!... ஆனதாலே உம்மேலே கூடுதலான பாசம் அம்மாவுக்கு!’

ஆயாவின் வாய்மொழிகளை வாய்மை மொழிகளாகவே அவள் செவிமடுத்தாள். சொக்கநாதன் தன்னை ஆஸ்பத்திரியி லிருந்து கொண்டுவந்த செய்தி அவளுக்கு வியப்புணர்ச்சியை உண்டாக்கி வேடிக்கை காட்டியது. ‘அப்படின்ன, என்னைப் பெற்றவங்களைப் பத்தி உங்களுக்கு எதுவுமே தெரியாதா?... காற்று வாக்கிலே எதுவுமே காதிலே விழலையா?” என்று பரிதாபமாகக் கேட்டாள், அவள். இதயத்தின் துயரம் கண்களே அணைந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/150&oldid=663957" இலிருந்து மீள்விக்கப்பட்டது