பக்கம்:தாய் மண்.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

151

‘உன்னைப் பெற்றவங்கள் விஷயமா எதுவும் எனக்குத் தெரியலே அம்மா! அன ைதன்னு முத்திரை குத்தப்ப்ட்ட தின்ன, அப்புறம் அந்த அளுதையை ஆதரவோட வளர்க்கிற திலேதானே இல்லத்திலே கவலை காட்டுவாங்க! ஒருவேளை, சொக்கநாதத்துக்கு உன்னேட பிறப்புச் சம்பந்தமாய் ஏதானும் தெரிஞ்சிருந்தாத்தான் உண்டு மதருக்கு அந்த ரகசியம் அநேகமாத் தெரிஞ்சிருக்க நியாயம் இல்லே!’ என்று நிறுத்திளுள். சுவரில் சாய்ந்திருந்த தலையை நகர்த்தி ஞள். சிணுங்கல் இருமல் சிணுங்கியது.

ஏமாற்றத்தின் வேதனையைத் தமிழரசி ஏற்க வேண்டிய துர்ப்பாக்கியம் வாய்த்தது. ‘நீ பிறந்த நேரத்திலே, சொக்கநாதத்தோட கள்ளக் காதலிக்கும் ஒரு பெண்பிள்ளை உன்னை மாதிரி பிறந்திச்சாம். ஆஸ்பத்திரியிலே அதைப் பார்க்கையிலேதான் உன்னேயும் அங்கே இருந்து வாங்கி வந்த தாகவும் ஒரு பேச்சு பின்னடி அடிப்பட்டுச்சு. சொக்கநாதன் அப்பாவுக்குப் பயந்த பிள்ளையாய் இருந்துகிட்டே ஒரு அபலைப் பெண்ணே ஏமாத்திக் கெடுத்து, கடைசியிலே அந்தப் பெண்ணை எங்கேயோ வடக்கே அனுப்பிச்சிட்டாராம். பெண்ணை மட்டும் எங்கேயோ ரகசியமாக வளர்க்கச் சொன் ஞராம்! ... அந்தப் பெண் குழந்தை உசிரோட இருந்திருந் தால், அதுவும் உன்னைப் போல இருக்கும்!... இப்போ அதெல் வாம் நமக்கு வேண்டாத கதை!...” என்று வலுக்கட்டாய மாகத் தன் பேச்சை முடித்தாள் ஆயாள்.

சுசீலா காபியை உண்டாக்கி"க் கொண்டு வந்து விட்டாள். பெரிய சாதனைதான். கடைத்தேங்காய் கிடைத்து வழிப் பிள்ளையாரும் கிடைத்தால், தேங்காயை அதற்கு உடைத்துவிடலாம்!- தமிழரசியின் தனிப்பேச்சின்போது அந்தப் பெண் இல்லாமல் இருந்தாளே, அதுவே பெரிய சாதனைதான்! கண்களை மூடிக்கொண்டு காபியை உள்ளே செலுத்தினுள். அடி மண்டி மிச்சம். அதுவே, அரைத் தம்ளர் இருந்தது. - - - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/151&oldid=663958" இலிருந்து மீள்விக்கப்பட்டது