பக்கம்:தாய் மண்.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

} 52

தமிழரசிக்குச் சிரிப்புச் சிரிப்பாக வந்தது, சுசீலாவின் காபியைச் சுவைத்தபோது ஆல்ை, தன்னுடைய பிறப்பு மர்மமாகவே அமைந்துவிட்டதை நினைத்துப் பார்க்கையில், அதே சிரிப்பு அழுகையாக உருக்காட்டி விடும் போல அச்சுறுத்தியது. “திருவாளர் சொக்கநாதன் என்ன ஆஸ்பத் திரியிலே எப்படிக் கண்டு பிடித்திருப்பார்?-ஒரு வேளை அவருக்கு என் பிறப்புக் குறித்துத் தடயம் ஏதாவது கிடைத் திருக்கலாமோ? என்னைக் கண்டெடுத்துத் தலைவியிடம் சேர்ப்பித்த அந்தப் பாசத்தில்தான் அவர் என் மீது அக்கறை கொண்டிருக்கிருரோ? அன்னை திலகவதி அம்மை யாருக்கு ஒரு சமயம் என் பிறப்பின் கதை தெரிந்திருந்து, அதை என்னிடம் மறைக்கிறார்களோ? முன்பு இரண்டொரு தருணங்களிலே என் பிறப்புப் பற்றிக் கேட்டபோதெல்லாம் ஒன்றுமே பிடிப்பாகச் சொல்ல வில்லையே அவர்கள்! எனக்குத் தெரியாமல் என் பெற்றாேர்கள் எங்கோ ஒரு முடுக்கில் இருக்கத்தான் இருப்பார்களோ? ஈஸ்வரா! என்னை எவ்வளவு அதிர்ஷ்டக்கட்டையாக ஆக்கிவிட்டாய்! -தத்துவ விசார மும் தலை வேதனையும் மீண்டும் அவளை ஆட்டிப்படைத்தன. அவள் தன் மூளைக்கு ஒரு மாற்றம் உண்டாக்க வேண்டியவன் ஆள்ை. ஆகவே, அவள் சுசீலாவை நோக்கினுள்.

“சுசீலா, உங்களுடைய கல்யாணச் சாப்பாட்டைச் சீக்கிரமே நானும் ஆயாளும் எதிர்பார்க்கிருேம்’ என்றாள் தமிழரசி,

“அது ஆண்டவன் கையில் அல்லவா இருக்கிறது, அக்கா?” என்று ஆண்டவன் தலையில் பாரத்தைப் போட். டாள் சுசீலா.

“அது உங்க கையில்தான் இருக்கிறது. சுசீ!’ என்று. அழுத்தமாகக் கூறினுள் தமிழரசி. * ,

ஒய்யாரக் கொண்டையைச் சிலுப்பிக்கொண்டு சுசீலா சிரித்தாள். -

தமிழரசி அங்கிருந்து புறப்பட்டாள். பிராட்வேயின் குறுகிய இடை வெளியில் மடங்கினள். அப்போது, காலையில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/152&oldid=663959" இலிருந்து மீள்விக்கப்பட்டது