பக்கம்:தாய் மண்.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

153

இல்லத் தலைவி தன்னிடம் எதையோ சொல்லத் துடித்து, பின்,அடங்கிவிட்ட நிகழ்ச்சியையும் அவள் மீண்டும் நினைத்துக் கொண்டாள்.

ஒரு வேளை, என் பிறப்புப் பற்றி ஏதாவது சொல்ல நினைத்து, பிறகு நான் வருந்துவேன் என்று மறைத்திருப்பார் களோ? என்றும் அவள் குறுக்கு வழியில் ஆலோசனை செய் தாள். அவளுடைய உள்ளம் உருகியது. அந்நினேவின் தவிப்பை ஒற்றிக்கொண்டே அவள் நடக்கத் தலைப்பட்டாள்.

மோகன்தாஸை ஒரு ரிக்ஷாவில் வைத்து இழுத்துச் சென்று கொண்டிருந்தான், ஒரு ரிக்ஷாவாலா.

அந்த ரிக்ஷாவாலா, மோகன்தாளின் தந்தையே தான்!... -

சியால்கோட் பகுதியிலே . ... !

Ll தினெட்டு

வானெலிப் பேச்சுக்குப் பிறகு, தமிழரசிக்கு மோகன் தாலைச் சந்திக்கும் வாய்ப்பு சூடு ஆறித்தான் ஏற்பட்டது. தன்னை வளர்த்த ஆபாளைக் காணப் புறப்பட்டபோது எடுத்துச்சென்ற மனக் குழப்பத்தை அவளிடமிருந்து பிரிந்த போதும் பத்திரமாகச் சுமந்து திரும்பிக் கொண்டிருந்தாள். வழியில் மோகன்தாஸின் உருவம் கொடிமின்னல்போல் பட்டு விலகியது. அவருக்கு உடம்புக்கு முடியாமல் இருக்கக்கண்டு தான், அவரை அவர் தகப்பளுரே ரிக்ஷாவில் இழுத்துக் செல்கிறார் போலிருக்கிறது!...” என்னும் முடிவுக்கு அவள் வர எத்தனம் செய்ததுதான் தாமதம், அவளுடன் வேதனை புதுச் சொந்தம் கொண்டாட வத்துவிட்டது. பழைய சொந்தங்கள் என்று அவள் மனம் அறிய-மனம் உணர எதுவுமே இல்லையென்பதாலா இப்புது உறவு? - o

தா. ம. 10 -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/153&oldid=663960" இலிருந்து மீள்விக்கப்பட்டது