பக்கம்:தாய் மண்.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154

மோகன்தாஸின் உருவமும் உள்ளமும் அவளது விழிக் கடையில் நீந்தி விளையாடின. தூக்க மாத்திரைகள் சாப்பிட முனைந்த அந்தப் பைத்தியக்கார நிகழ்ச்சியின்போது, அவன் அடைந்த பதட்டத்தையும் அனுபவித்த துயரத்தை யும் அவள் எப்படி மறப்பாள்?-மறக்கவும் மாட்டாள்! மறக்கக்கூடாது என்பதற்காகத்தான் இப்படிப்பட்ட சம்ப வங்கள் உருவாகின்றனவோ? -

வீட்டுக்கு வந்து விளக்குகளை எரியச் செய்தாள். ஒரிரு திமிஷங்கள் ஒய்வு பெற்றாள். உடனே, மோகன்தாஸைக் காணப் புறப்பட்டாள்.-அதற்குள். அங்கே மோகன்தாஸின் உருவம் நிழலாடியது.

அவளே வரவேற்று, அவனது உடல் நலம் பற்றிக் கவலை யுடன் விசாரித்தாள் தமிழரசி,

‘நாள் முச்சூடும் கொட்டுற பனியிலேயும் மழையிலேயும் கூட நான் என் தோழர்களுடன் துணை நின்று நம்ம எதிரி களைச் சாடியிருக்கேன். அப்போதெல்லாம் எங்களுக்கு எங்க உடம்பைப் பற்றிச் சிந்தனையே வராது. இப்ப, தண்ணிர் மாற்றம் தடுமனே உண்டாக்கிட்டது. இதைப் பார்த்ததும் எங்கப்பா என்னை ரிக்ஷாவிலே வச்சு டாக்டர் கிட்டே அழைச்சிட்டுப் போயிட்டார். எங்க அப்பா என்ன சொல்லி யும் என் பேச்சைக் காதிலேயே வாங்கிடலே. இதிலே என்ன தம்பி வெட்கம்? உன்னை வளர்த்து, ஆளாக்கி, படிக்க வைக்கிறதுக்காக நாங்க பட்ட கஷ்டம் கொஞ்சமா, நஞ்சமா? இதே ரிக்ஷாதானே நமக்கு எப்பவும் படியளந்து வருதுன்னு அப்பாவும் அம்மாவும் எனக்குப் புத்தி சொன் ளுங்க!...” என்று நிறுத்தினன் மோகன்தாஸ்.

காட்சி மாற்றத்துக்கென்று ஒய்வு ஒதுக்கப்படுவது இயல்பு.

அவன் முகத்தைத் துடைத்துக் கொண்டான்.

இதற்குள், தமிழரசி தன்னை சன்ற தாய் தந்தையைத் தேடி ஆயிரம் தரம் அலைந்து அயர்ந்தாள். “என்னுடைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/154&oldid=663961" இலிருந்து மீள்விக்கப்பட்டது