பக்கம்:தாய் மண்.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

155

அன்னையும் தந்தையும் எனக்கு இருந்திருந்தால், அவர்களேத் தலையில் வைத்துத் தூக்கிக்கொண்டு ஆடுவேன்!...”

எண்ணம் முற்றுப் பெறவில்லை! ஆயாள் சொன்ன ஜோஸ்யம்’ ஓடி வந்தது.

தமிழரசி!”

சித்தனை கலைந்தது.

‘உங்க ரேடியோப் பேச்சைக் கேட்டேன்!” என்று அவன் ஆரம்பித்தான்.

“மனம் ஒன்றிவிட்ட நிலையிலே, இம்மாதிரியான பாராட்டுப் பரிமாறல் தேவையல்ல!” என்று அவள் லஜ்ஜை’ அடைந்தாள். ஆகவே, அவள் சரிங்க’ என்று பேச்சை முடித்துக்கொள்ளச் சிந்தை செய்தாள்.

ஆனல், அவனே அப்போதுதான் தன் ரசிப்புத்தன்மையை விண்டுரைக்கத் தொடங்கியிருந்தான் : ‘உங்க பேச்சு பெண்களைப் பற்றி இருந்தாலும், எங்களுக்கும் ரொம்ப உபயோகமானது. ஆனும் பெண்ணும் அ ன் பால் ஒன்றி இணைஞ்சு, அறத்தால் இன்ப வாழ்க்கை நடத்தி, கடமையாலே அவங்க ரெண்டு பேரும் லட்சிய சித்தி பெற்று வாழ வேண்டிய தர்மத்தையும் பண்பாட்டையும் விநய மாகவும் விவேகமாகவும் சொல்லியிருந்தது உருக்கமா யிருந்திச்சு. உண்மை எப்போதும் உருக்கமானதுதான்!... உண்மை கசக்குமென்று சொல்லுவாங்க. எனக்கு இனிச்சுது. பிறப்பு என்று வந்தபின்னே அதுக்கு ஒரு மகிமையை உண்டாக்க வேண்டியது நம்ம கடமை. இது ஆணுக்கும் பொது;பெண்ணுக்கும் பொது. உள்ளத்தைத் துரங்கப் பண்ணி விட்டு, உடம்புக்கு உணவு கொடுத்துப் போஷித்துக் கடைசியிலே அதையும் துரங்கச்செய்யறதிலே என்ன நியாயம் இருக்கமுடியும்? தார்.மிகக் குறிக்கோள் கொண்ட மனசு ஒத்த ஆணும் பெண்ணும் தம்பதியானல், அவங்களோட வாழ்வின் வளத்துக்கு ஈடேது இணை ஏது?... சீதை, பாஞ்சாவி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/155&oldid=663962" இலிருந்து மீள்விக்கப்பட்டது