பக்கம்:தாய் மண்.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156

சாவித்திரி, நளாயினி, கண்ணகி போன்ற பேர் ஒவ்வொன் றிலேயும் ஒவ்வொரு உலகம் இருக்கிற விந்தையையும் அழகாகச் சொன்னிங்க. பாட்டு வரிதான் கொஞ்சம் கூடுதலாயிருந்தது. நீங்க தமிழ் ஆசிரியை. அந்த ஞானம் கூடுதலாய் வராமலிருந்தால், அது யதார்த்தமாயிருந் திருக்காது. எதுவும் இயற்கைக்குப் பொருந்தியிருந்தால் தானே நல்லது? அப்பத்தான் உலக சம்மதமும் கிடைக்கும்!... வாஸ்தவம்தான்! ஆத்ம பலத்தை ஒரு காப்புக் கவச மாகவும், ஆத்ம நேயத்தை ஒரு பண்பாட்டு அன்பாகவும், ஆத்ம நிவேதனத்தை ஒரு சத்திய தர்மமாகவும் பயிலும் தியாகம் கோபுர தீபமாகிறது-நீங்க சொன்ன இந்த மூன்று வாழ்க்கைத் தத்துவங்களும் சிருஷ்டியின் முப்பெரும் தத்துவங்களைப்போல எனக்குத் தோணுச்சு. உங்க பேச்சிலே உங்க மனவேள்வியும், உங்க இலட்சியமும், உங்க கனவும் அசலாகப் புரிஞ்சுது!’’

அவள் பேச்சுக்கு விமர்சனம் செய்ய எண்ணி, அவனே ஒரு பேச்சு நிகழ்த்திவிட்டான். அவன் மொழிந்த ஆதரவான போற்றுதல்கள் அவளுக்கு எவ்வளவோ சக்தியைப் பொழிந்தன. என் மனக்கனவுக்கு அனுசரணையாக இவரது சிந்தனையின் மனமும் பக்குவம் அடைந்து வருகிறது போலும்!...”

விளக்கின் சுடரொளியில் அவன் அவளை ஊடுருவிப் பார்த்தான். இப்படி அவன் எப்போதும் பார்த்ததில்லை. ஒரு புதிய பார்வை!’ - இவ்வுண்மையை அவள் உணர்ந் தாள். உடனே, அவள் வெட்கத்தை உணர்ந்தாள்: அன்பு மேவச் சிரித்தாள். கள்ள விழிப் பார்வைக்குப் பாங்கான கள்ளக் களிப்பாக இருக்கலாம்.

பற்றுக்கோடுகள் இரண்டும் விடை பெற்றன. அவனது உள்ளன்பு மட்டும் அங்கே தங்கியது. ஒடம் போகும்; கரை தங்கிவிடும். - பின்புறம் இருந்த மாதா கோயில் மணி ஏழு முறை ஒலித்து ஓய்ந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/156&oldid=663963" இலிருந்து மீள்விக்கப்பட்டது