பக்கம்:தாய் மண்.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158

ஒருவராகவே பகைவர் கூட்டத்துக்குப் பக்கவாட்டிலே செலுத்திச் சென் ருர். அவரைத் தொடர்ந்து நானும் என் சகாக்களும் பின் ஞலே தனியாப் போளுேம்!

“எதிரிகளின் பீரங்கித் தாக்குதலும், டாங்குத் தாக்குத லாலும் கடுமை ஆச்சு. அதையெல்லாம் பொருட்படுத் தாமல், பகைவருடைய முதல் டாங்கியைத் தம்முடைய பீரங்கியால் அபாரமாகச் சுட்டு வீழ்த்தினர் அப்துல் ஹமீது. அந்தச் சூட்டின் துடிப்போடவே, எங்க அணி புதிய நிலை ஒண்ணே அடைஞ்சுது. எதிராளிகளின் இன்னொரு டாங்கி யையும் தீக்கிரையாக்கினர் அவர், இதற்குள்ளே, விரோதி சளின் டாங்குகளிலே இருந்த துருப்புகள் எங்கள் ஹவில்தார் இருந்த இடத்தைக் கண்டுட்டாங்க! உடனே அவங்க எங்க டிவிஷனை நோக்கிச் சுட ஆரம்பிச்சாங்க. அப்துல் ஹமீதின் ஜீப்பை நோக்கி எந்திரத் துப்பாக்கியாலே கடுமையாச் சுடத் தொடங்கினங்க. அப்பவும் அவர் மனம் தளரலே! இன்னெரு டாங்கியைச் சேதப்படுத்திஞர் காண்டீபனுக்குக் கண்ணன் போதிச்ச அந்த அஞ்சாமை, நெஞ்சு பலம், கடவுள் பக்தி போன்ற நம்பிக்கைகள் எப்போதும் போல அப்போதும் எங்களுக்குச் சமய சஞ்சீவியாய் வலுவூட்டின; நாங்க தைரியமாப் போராடினுேம்! இதயமற்ற வெறியர்களைக் காடு மேடாக்கி அலைக்கழித்தோம்! போலோ பாரத் மாதா-கீ ஜேய்!” என்ற ஆர்வக் குரல்களை விண்முட்ட எழுப்பி, நம்ம எதிரிகளை மண்முட்ட அடிச்சோம்!... எங்களுடைய வல்லமையைக் கண்டு பொசுங்கின. டாங்கிகள். அந்தப் பொருமைப் பாவிகள் செலுத்திய பீரங்கிக் குண்டு ஒண்னு நேரடியாய் எங்களைத் தாக்கிச்சு. -

‘அவ்வளவுதான் தெரியும்!

‘திரும்ப நான் எங்க ராணுவ முகாம் ஆஸ்பத்திரியிலே தான் கண்களைத் திறந்து பார்த்தேன். பகைவரின் பீரங்கிக் குண்டுக்கு மதிப்பிற்குரிய எங்கள் ஹவில்தார் அப்துல் ஹமீது உயிர்ப்பலியான சோக வரலாறு எனக்குத் தெரிஞ்சது. எங்க அணியைச் சேர்ந்த பதினறு பேர்களிலே மேஜரைச் சேர்த்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/158&oldid=663965" இலிருந்து மீள்விக்கப்பட்டது