பக்கம்:தாய் மண்.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

159

இரண்டு பேர் உயிர் துறந்தாங்க மலையாளத்துக்காரர் ஒருத்தருக்குக் கண் ரெண்டும் போச்சு. இன்னொருத்தர் சிங். அவருக்குக் கை ரெண்டும் போச்சு. என்னலே இந்தக் கால்களே மட்டும்தான் என் தாய்க்காக - தாய் மண்ணுக்காகத் தியாகம் செய்ய முடிஞ்சிது. நம்ம தலைவருங்களும், ராணுவ மேலதிகாரிகளும் எங்களைப் பாராட்டி ஆறுதல் சொல்லிக் கிட்டே இருந்தாங்க...! நான் பிறந்த பொன்னுட்டுக்காக, எங்க ஹவில்தாரைப் போல நானும் உயிர்த் தியாகம் செய்யும் பேறு எனக்குக் கிடைச்சிருந்தா, அது எனக்கும் என் தமிழ் மக்களுக்கும் பெருமை தந்திருக்கும்!...எங்க ஹவில்தார் பூசைக்குரிய தியாக சீலர்!...”

அவன் அத்துடன் தன் பேச்சை நிறுத்திக் கொண்டான்; விழிகளை மூடியபடி வீற்றிருந்தான். மெய்ம்மறந்த நிலையில் அவன் காணப்பட்டான். தன்னுடைய நிர்மலமான கண்ணிரை மாலையாக்கி, அந்தத் தியாகி ஹவில்தார் அப்துல் ஹமீதுக்குக் காணிக்கை செலுத்திக் கொண்டிருந்தான் மோகன்தாஸ். -

கடந்த கால நினைவோட்டங்களினின்றும் சுவாதீனமாக விடுபட்ட தமிழரசி இப்போது தன் வயப்பட்டாள். இமை அரும்புகள் சில சிதறின. அவள் கண்களைத் துடைத்துக் கொண்டாள்.

மேஜைமீது இருந்த வெண்மை மிகுந்த கடிதத்தாள்கள் அவளது பார்வைக்கு விருந்து வைத்தன. கடிதத்தாள்களின் மீது பேணு இருந்தது. அவள் சிந்தனை வசப்பட்டவளாக எழுந்து அவ்வறைக்குள்ளே குறுக்கும் நெடுக்குமாய் நடந் தாள். அவளுடன் அவளது சிந்தனைகளும் நடைபோட்டன. அவள் மனம் எழுச்சி கொண்டது. நடந்தவள் ஏதோ ஒரு தீர்மானத்துக்கு வந்தவள் போன்று ஆசனத்தில் வந்து அமர்ந் தாள். ஒருமுறை தன்னுடைய எழிலார் மதர் விழிகளை மூடிக் கொண்டாள். அவ்விழி விரிப்பில், புன்னகையும் புது நிலவுமாக மோகன்தாஸ் காட்சியளித்துக் கொண்டிருக்கக் கண்டாள். அவள். அவள் நெஞ்சத்தில் இன்பமும் ஆறுதலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/159&oldid=663966" இலிருந்து மீள்விக்கப்பட்டது