பக்கம்:தாய் மண்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16

சுழன்று கொண்டிருந்த அவளது சிந்தனையில், அன்றைக் குப் போதிக்க வேண்டிய பாடங்களின் குறிப்புக்கள் அலை மோதிக் கொண்டிருந்தன.

நைனியப்பன் தெருவிலிருந்து மடங்கி நேராக நடந் தாள். அன்றைத் தேதியில் அவள் செய்தாக வேண்டிய கடமைகளே-பொறுப்புக்களை அவள் திரும்பவும் ஒருமுறை நினைவு கூர்ந்தாள். மதருக்குக் கடிதம் எழுதவேண்டும்: தசரா விடுமுறையில் அவர்களைப் பார்த்து. மிஸ்டர் அம்பல வாணனுக்கு என் முடிவைத் தெரிவித்து விடவேண்டும்!” என்ற இரண்டு விஷயங்கள் அவளுக்கு இருபெரும் கடமை களாகவும், பொறுப்புக்களாகவும் அமைந்தன.

மண்ணடிக் கடைவீதி பின் தங்கியது. வலது புறம்

தம்புச் செட்டித் தெரு நீண்டது. காளிகாம்பிகை-காமடேஸ்வரர் தெய்வாலயம் வந்தது.

அதன் சந்நிதியில் அவள் பயபக்தியுடன் நின்றாள். கால் ஸ்லிப்பர்’களைக் கழற்றி ஒதுக்கிவிட்டு, ஒதுங்கி தின்றாள். கைதொழுதாள். மீண்டும் புறப்பட்டாள்.

அப்போது, பாரிமுனையிலிருந்து சைக்கிளில் விரைந்து வந்து யுவன் ஒருவன் அவளேக் கண்டு அவள் வசமாக ஒதுங்கி நிற்க எத்தனம் செய்தான். -

ஆஞல், அவளோ அந்த புவனே நோட்டம் பார்த்து விட்டு, முகத்தைச் சுளித்து வேறு புறம் தலையைத் திருப்பிக் கொண்டு விரைந்து சென்றாள். -

அதோ, ஸ்கூல் வந்து விட்டது:- “சாரதா பெண்கள் உயர்நிலைப்பள்ளி. 3.

குமாரி தமிழரசி கம்பீரமான மிடுக்குடனும், கடமை மிகுந்த தன்னம்பிக்கையுடனும், லட்சுமீகரம் ததும்பி வழிய தலைமை ஆசிரியையின் அறைக்குள் நுழைந்தாள். மேஜை மீது காணப்பட்ட கையெழுத்துப் பதிவுப் புத்தகத்தைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/16&oldid=663967" இலிருந்து மீள்விக்கப்பட்டது