பக்கம்:தாய் மண்.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160

பூத்தன. தாய் நாட்டு வீரன் மோகன்தாஸைச் சந்தித்து, தான் அவன் பேரில் கொண்டுள்ள பரிசுத்தமான காதலை வெளியிட்டுவிடத் துடித்துக் கொண்டிருந்தாள். அதற்குரிய புனிதமான வேளைக்காகக் காத்திருந்தாள்.

‘என் மனத்தின் சுந்தரமான கனவுகளை அன்பர் மோகன்தாஸ் அவர்களிடம் எடுத்துரைக்கக் கடிதமே ஒரு நல்ல சாதனமாகும். அதுவே, சிலாக்கியமான வழியும்கூட. நேருக்கு நேராக நான் அவரிடம் என் காதலை வெளிப்படுத்து வதென்பது சிரமமான காரியமே! ஆகவே, கடிதத்தின் மூல மாகவே என் காதலை வெளிப்படுத்திவிட வேண்டும்!’ என்று தீர்மானித்தாள். கடிதத்தாள்களை எடுத்து வரிசைப்படுத்திக் கொண்டு அமர்ந்தாள். பிள்ளையார் சுழி இட்டாள். கடந்த சில நாட்களாக அவள் தனக்குள்ளாகவே சிந்தித்து வைத்தி ருந்த வாசகங்கள் சிலவற்றை மீண்டும் மனத்தில் வாங்கிக் கொண்டாள். புனிதமானதொரு கடமையைச் செய்யப் போகும் பூரிப்புடன் அவள் பேனவை இயக்கத் தொடங் சிள்ை. ‘எனது மதிப்புக்கும் அன்புக்கும் உரிய திருவாளர் மோகன்தாஸ் அவர்கட்கு என்று ஒரே வேகத்தில் எழுதி முடித்ததும், அவள் பேளு நின்றுவிட்டது. மோகன்தாஸின் பெயரை எடுத்த எடுப்பிலேயே குறித்து விளிப்பதை அவ் வளவு விவேகமான காரியமாக அவள் கருதவில்லை. ஆகவே, எழுதிய வரிகளை அடித்துக் கிறுக்கினள். அந்தத் தாளக் கசக்கிப் போட்டுவிட்டு அடுத்த தாளை வசப்படுத்தினுள்.

அடுத்த தாளின் தலைப்பில் அவள் எழுதத் தொடங் கிளுள்.

“எனது மதிப்புக்கும் அன்புக்கும் உரிய தங்கட்கு’ என்று, எழுதி முடித்திட்டாள். அவ்வரிகளிலே மன ஒட்டுறவு பின்னிக் கிடப்பதாகவே அவள் உணரலாள்ை. மேற் கொண்டு எழுதவேண்டிய விவரங்களை அவள் மனத்திற்குள் ளாகவே கோவைப் படுத்திக்கொண்டாள்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/160&oldid=663968" இலிருந்து மீள்விக்கப்பட்டது