பக்கம்:தாய் மண்.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

161

அப்போது, ‘தமிழரசி’ என்று கூப்பிட்டபடி, சாவித்திரி அங்கு வந்தாள்.

தமிழரசி பேனவை மூடி அக்கடிதத்தின் மீது வைத்து விட்டு, சாவித்திரியை வரவேற்றாள்.

நாற்காலியில் அமர்ந்த சாவித்திரி, மேஜை மீதிருந்த கடிதத்தைப் பார்த்தாள், ‘லெட்டர் எழுது நீங்களா.

உச்சர்?’ என்று கேட்டாள்.

தமிழரசி புன்னகை பூத்தவாறு, “ஆமாம்” என்று பதில் மொழிந்தாள். பிறகு, அவளே நோக்கிய வண்ணம், ‘நான் என் காதலருக்குக் கடிதம் எழுத ஆரம்பித்தேன்’ என்றாள்.

சாவித்திரிக்கு வியப்பு மேலிட்டது. பேசாமல், தமிழரசியை இமைக்காமல், அவள் பார்த்தாள்,

“என்ன அப்படி விழிக்கிறீர்கள், டீச்சர் நான் ராணுவ வீரர் மோகன்தாஸ் அவர்களைக் காதலிக்கிறேன். என் மனத்தைத் திறந்துகாட்ட இக்கடிதம்தான் எனக்குக் கை கொடுக்க வேண்டும்’ என்று கூறினுள் தமிழரசி.

மேலும், அதிசயத்தின் உருவம் ஆளுள் சாவித்திரி. ‘மெய்யாகவா தமிழரசி?’ என்று சற்றுப் பலமான தொனியி

லேயே கேட்டு விட்டாள்.

“நிஜமாகவே நீங்கள் ஒர் அதிசயப் பெண்தான்!இதற்குமேல் சாவித்திரியால் எதுவுமே பேச முடியவில்லை. அவளது சிவப்புக் கன்னங்களின் கீழ்ப்புறத்தில் சில நீர்த்துளி கள் தங்கின. . . . .

தமிழரசி கம்பீரமான பெருமை கொண்டு சிரித்தாள். சாவித்திரி தன்னுடைய மனப் போராட்டத்தைப் பற்றி முன்னர் சொல்லிய சம்பவத்தையும் அவள் நினைவு கூர்ந்தாள். “சாவித்திரி தன் மனப்போராட்டத்தில் எப்படிப்பட்ட முடிவை நிர்ணயித்து வைத்திருக்கிருளோ, தெரிய வில்லையே!”

மெளனமாக விடிைகள் சில கழிந்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/161&oldid=663969" இலிருந்து மீள்விக்கப்பட்டது