பக்கம்:தாய் மண்.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162

தலைமை ஆசிரியையைச் சந்தித்ததாகவும், குழந்தைகள் தின விழாவுக்கு வீரர் மோகன்தாஸ் அவர்களையே தலைமை தாங்குவதற்கு ஏற்பாடு செய்யும்படியும் சொன்ன தகவலை வெளியிட்டாள் ஆசிரியை சாவித்திரி.

அதன் பேரில், சாவித்திரியை அழைத்துக் கொண்டு சென்றாள் தமிழரசி, மோகன்தாஸிடம் தன் சிநேகிதியை அறிமுகப்படுத்தினுள். பிறகு, விவரத்தை வெளியிட்டாள்.

மோகன்தாஸ் அப்பணியை மனப்பூர்வமான பெருமை. துலங்க ஏற்றுக்கொண்டான். இருவரும் திரும்பினர்கள்.

தமிழரசியிடம் விடை பெற்றபோது, ‘டீச்சர் உங்களைக் கையெடுத்துக் கும்பிடுகிறேன்’ என்று சொல்லிப் பூங்கரங் களைக் குவித்தாள் சாவித்திரி.

ஜெய் ஜவான்!”

பத்தொன்பது

G நருஜியின் இலட்சியக் கனவான குழந்தைகளின் அன்புமயமான உலகம் அங்கே உருவாகியிருந்தது.

காலே இளம்பரிதியின் மென்மை மிகுந்த கதிர்கள் பாங் குடன் விளையாடிக் கொண்டிருந்தன,

சாரதா பெண்கள் உயர்நிலைப் பள்ளியின் விளையாட்டு மைதானத்தின் மையத்தில் அமைக்கப்பட்டிருந்த அழகான பந்தலில் நேரு பிரானின் பெரிய படம் மலர்மாலை திகழக் காட்சியளித்துக் கொண்டிருந்தது. தலைமை ஆசிரியை சரோஜினி மூர்த்தியின் மேற்பார்வையில் ஏனைய ஆசிரியை களும் அழகு நிறைந்த அந்தப் பந்தலுக்கு வெளிப்புறம் நின்று கொண்டிருந்தார்கள். -

பள்ளியின் நிறுவனர் திருவாளர் சொக்கநாதன் ஊரில். இல்லை. ஆகவே, அவர் இவ்விழாவில் கலந்து கொள்ள முடி. யாமல் போய்விட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/162&oldid=663970" இலிருந்து மீள்விக்கப்பட்டது