பக்கம்:தாய் மண்.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

163

குழந்தைகளின் தாய் தந்தையர் இணை சேர்ந்து குழுமிய வாறு இருந்தனர்.

புதிய மகிழ்வின் பின்னலுடன் வாசற்புறத்திலேயே மனம் பதித்துக் காணப்பட்டாள் தமிழரசி, அவளே அண்டி வந்தாள் சாவித்திரி. தமிழரசியின் பொட்டும் பூவும் சாவித். திரியின் திருஷ்டியில் திசைமாறிச் சுழன்று கொண்டிருந்தன. அவர்கள் இருவரும் நெருங்கி நின்றார்களே தவிர, பேச் சொன்றும் அவர்களிடையே எழவில்லை.

“மன்னும் இமயமலை எங்கள் மலையே! என்று கோரஸ்” பாடிக் கொண்டிருந்தார்கள் சிறுமிகள்.

பாடல் முடிந்ததும் இசைத்தட்டு போடப்பட்டது. அந்த இசைத்தட்டு பாடவில்லை. பேசத் தொடங்கியது. காங்கிரஸ் தலைவரின் பேச்சு அது. நம்முடைய மானத்தைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமென்றால், நாம் நம்முடைய சொந்தக் கால்களிலேயே நிற்கவேண்டும்! என்ற சொற். களில் எவ்வளவு அழுத்தம் பதித்துப் பேசிவிட்டார்!

வெகு அமைதியுடன் அப்பேச்சைக் கேட்டார்கள்.

இப்பேச்சைக் காந்தி ஜயந்தி அன்று நேரில் கேட்ட தைக் குறிப்பிட்டாள் தமிழரசி. சாவித்திரியும் கேட்டதாகச் சொன்னுள்.

அப்போது, குமாரி ஜலஜா அவர்கள் இருவரையும் ஜாடையாகப் பார்த்துவிட்டு, வேறு பக்கம் திரும்பிக் கொண்டாள். -

‘உங்ககிட்டே வம்புக்கு வந்து வாங்கிக் கட்டிக்கொண்ட ஜலஜாவின் லவரைப் பற்றி நம்ம ஹெட்மிஸ்ட்ரஸ் காதுக் குக்கூட எட்டி விட்டிருக்கிறது, டீச்சர்!’ என்றாள் சாவித்திரி. அவள் தன்னுடைய வெறும் நெற்றியைத் தடவிக்கொண்டே. சொன்னுள். -

“அப்படியா?’ என்ற மட்டுடன் பேச்சைத் துண்டித் தாள் தமிழரசி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/163&oldid=663971" இலிருந்து மீள்விக்கப்பட்டது