பக்கம்:தாய் மண்.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164

‘நீங்க மிஸ்டர் மோகன்தாஸ் அவர்களை “லவ்’ பண்ணுற உண்மையை அவள் அறிய நேர்ந்தால், அவள் அதிசயப்பட்டுப் போவாளாக்கும்!... அவள் உருவத்தோடு பழகிறவள்தானே, பாவம்’ என்று மீண்டும் குறுக்கிட் டாள் சாவித்திரி.

தமிழரசி பொருள் புன்னகையுடன் நிறுத்திக் கொண்

சுற்று மதிலின் வாசலைக் கடந்து வந்தது டாக்ளி.

“அதோ, உங்க லவர் வந்து விட்டார், டீச்சர்!” என்று பெருமையுடன் தெரிவித்தாள் சாவித்திரி.

‘அவர் நம்ம நாட்டின் தியாகி டீச்சர்!’ என்று சொல் லிக்கொண்டே விரைந்தாள் தமிழரசி,

தலைமை ஆசிரியை முன் சென்று வீரர் மோகன்தாஸை வணங்கி வரவேற்றாள்.

தமிழரசியும் வணக்கம் சொன்னுள். -

கைப்பிடிகளின் துணையுடன் நடந்து வந்தான் வீரமகன் மோகன்தாஸ்,

ஜலஜா தனக்குத் துணையாக ஆசிரியை ஒருத்தியைக் கூட்டுச் சேர்த்துக் கொண்டு நகைத்ததைத் தமிழரசி காணத் தவறவில்லை!......

மோகன்தாஸின் கழுத்தில் பெரிய மாலை ஒன்றை

அணிவித்தாள் சிறுமி முத்தழகி.

‘ஜேய் ஜவான்! கோஷங்கள் முழங்கின.

உணர்ச்சிப் பெருக்குடன் தோன்றினன் மோகன்தாஸ். அவன் ஊன்று கோல்களைச் சார்ந்து நின்றபடி, ஆசிய ஜோதிக்குக் கரம் குவித்து அஞ்சலி செய்தான். விழிகளைக் கண்ணிர் மறைத்தது. துடைத்துக் கொண்டான். ‘நேருஜி தம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கிறார். அதற்கு அத் தாட்சியாக இதோ, குழந்தைகளின் உலகம் உருப்பெற்றிருக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/164&oldid=663972" இலிருந்து மீள்விக்கப்பட்டது