பக்கம்:தாய் மண்.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1.65

கின்றது!’ என்று அற்புதமாக முன்னுரை அமைத்துக் கொண்டு அவன் தன்னுடைய தலைமை உரையை நிகழ்த்தி ஞன். பாரத ரத்தினத்தின் இலட்சியங்களைச் சொல்லி முடித்ததும், நாட்டின் தற்போதைய நிலையைப் பற்றியும் நம் தாய்நாட்டு மண்ணுக்காக நாட்டுமக்கள் ஆற்றவேண்டிய கடமைகள் பற்றியும் எடுத்துரைத்தான். போர் முனையில் எதிரிகளைப் புறமுதுகிட்டு ஓடச் செய்த நம் வீரத்திலகங்களே யும் அவன் நினைவூட்டினன். “வீரம் போற்றப்படும் போது, வீரம் வளர்கிறது; வாழ்கிறது; புத்துயிர் எடுக்கிறது! இவ் வுண்மைக்கு உங்கள் அனைவரது அன்பே எடுத்துக் காட்டா கும். தாய் மண்ணுக்கென நான் என்னுலியன்ற சிறுபணி புரிந்தேன். அது என் சடமை! அதற்கென, நீங்கள் எல்லோரும் உங்கள் அன்பைச் சொரிந்தீர்கள். அது உங்கள் கடமை! உங்கள் அனைவரது அன்பும் நல்லெண்னமும் பொற். புடையவை. தலை வணங்குகிறேன், நான்!...” என்று பேச்சினை நிறைவு படுத்தினன்.

கூட்டம் மெய்ம்மறந்து ரசித்து, மேனி சிலிர்த்துக் கையொலி எழுப்பியது.

மோகன்தாஸ் எல்லோரிடமும் சொல்லிக் கொண்டு டாக்ஸியில் திரும்பினன். தமிழரசி பெருமையின் கம்பீர மான லயிப்புடன் அவனே வழியனுப்பி வைத்தாள், அவள் அங்கிருந்து திரும்பிய போது, அவளேயும் அறியாமல் புதிய தெம்பும் புதிய களிப்பும் ஊறின. . . . . . .

‘நீங்க பாக்கியசாலி தமிழரசி’ என்ற சாவித்திரியின் பாராட்டுரையின் துணை கொண்டு தமிழரசி வீட்டை அடைந்தாள். . -

அவள் பார்வையில் அன்று எழுதத் தொடங்கியிருந்த கடிதம் அரை குறையாக இருப்பதைக் கவனித்தாள். அப்போதைய உணவுப் பிரச்னைக்கு ஒரு வழியாகத் தீர்வு கண்டபின், மீண்டும் அக்கடிதத்தைப் பூர்த்தி செய்ய, விரும்பினள். பேணு ஒடி நின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/165&oldid=663973" இலிருந்து மீள்விக்கப்பட்டது