பக்கம்:தாய் மண்.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

} 66

மோகன்தாஸிடம் சேர்ப்பிக்கப் படுவதற்கென்று முதலில் நகல் ஒன்றைத் தயாரித்தாள். எழுதியதைத் திரும்பப் படித்த போது, அவளுக்க அக்கடிதம் நிறைவுகாட்டவில்லை. வார்த்தைகள் சரியாக விழவில்லையோ என்று அவள் பயந் தாள். அந்தக் கடுதாசியைக் கசக்கிப் போட்டாள். வார்த் தைகளைக் கசக்கிப் போட முடியவில்லை. மீண்டும் படித்துப் பார்த்தாள்.

“...உங்கள் தியாகத்தை வாழ்த்த வேண்டியது என் கடமை. நாட்டுக்காகத் தியாகம் செய்த தங்களுக்கு நான் என்னையே காணிக்கை வைக்கத் துணிந்துவிட்டேன். தங்க ளுக்குக் கிடைத்திருக்கிற புகழிலே-பெருமையிலே எனக்கும் பங்கு தாருங்கள்!... என்னுடைய இந்த நெஞ்சுரம் உங்க ளுக்கு அதிசயமாகத் தோன்றுகிறதா? எதுவும் இயற்கைக்குப் பொருந்தியிருந்தால்தான், அதில் உண்மைத் தன்மையும் இருக்க முடியும்? அப்போதுதான் உலக சம்மதமும் கிடைக் கும் என்று நீங்கள் பொதுவாகத் தங்கள் கருத்தை வெளியிட் டீர்கள். நான் தங்களை நேசிப்பது இயற்கையோடு ஒட்டிய மனித இயல்புதான். நான் உங்களைத் திருமணம் செய்து கொண்டபின், நீங்கள் உங்கள் கால்களை இழந்திருந்தால் அப்போது மட்டும் நான் தங்களை இழந்துவிட ஒப்புவேனு? மாட்டேனே!... ஒரு நாளும் மாட்டேன்! எனக்கு என் மனம் தான் தெய்வம்! என்னுடைய வாழ்வுக்கு என்னுடைய கடமைதான் சாட்சி! எனக்கு நான்தான் வழிகாட்டி! நான் பிறரைப் பற்றிக் கவலைப்பட விரும்பாதவள்!... என்னைப் பற்றிப் பிறர் கவலைப்படவும், கவலைப்படுவதையும் நான் கிஞ்சித்தும் விரும்பாதவள். என் கடமையில் என் கடமைப் பண்பும் மனிதப் பண்பாடும் கலந்திருக்கின்றன. என்னு டைய இக்கடமைக்குக் கருணை, தர்மம், தியாகம் போன்ற சொற்களைப் பொருள்கூற அழைக்காதீர்கள்...!” -

அடுத்த தடவையாகவும் அவள் தன் கடிதத்தின் நகலை நெஞ்சு செலுத்தி உன்னிப்புடன் படித்துப் பார்த்தாள். அதில் தன்னுடைய இதயத்தின் மூலத்தைப் பார்க்க முடிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/166&oldid=663974" இலிருந்து மீள்விக்கப்பட்டது