பக்கம்:தாய் மண்.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

167

வில்லை; தர்க்க வாதத்தைத்தான் அவள் படித்தாள். சொல்லிக் காட்டியவரையில் அதில் நியாய வாதம்தான் பேசியது. ஆனால், அதையே மடக்கிப் பிடித்து அவன் விபரீதமாக அர்த்தம் எடுத்துக் கொண்டால்...? தயங்கிள்ை. முற்றுப் பெருத வினக் குறிக்கும், விடை கிட்டாத ஆச்சரியக் குறிக்கும் இடையே தமிழரசி ஒரு முழு இரவை ஒரு முழுப் பகலாக்கிக் கொண்டாள். ஊதுவத்தியும் மெழுகுவர்த்தியும் அவளுக்குத் துணை ஆயின. மனத்தை ஒரு நிலைப்படுத்திக் கொண்டு நிமிஷங்கள் சிலவற்றைச் செலவு செய்தாள். பூவிலுள்ள நாற்றமாக அவளது உள் மனத்தின் அடித் தளத்தில் இறைமை கந்தம் பரப்பிக் கொண்டிருந்ததை அவள் அறிவு உணர்ந்தது. அவள் தன் மனத்துடன் ரகசியம் பேசுவதற்குச் செம்மையான நேரம் அது.

நான் ராணுவ வீரர் மோகன்தாஸை நேசிக்கிறேன்!-- ஆம்; உண்மை. நான் அவரைக் காதலிக்கிறேன். மனம் கூடுவிட்டுக் கூடு பாய்ந்த பரிவர்த்தனையில் கிடைத்த முடிவு இது. நான் அவர்மீது அன்பு கொண்டிருக்கிறேன்!- ஆம்: உண்மை!... அதேபோல, அவரும் என்பால் அன்பு பாராட்டிக்கொண்டுதான் வருகிறார். அதுவும் மெய்தான்!... சரி...

“நான் அவரைக் காதலிப்பதில் உள்ள லட்சியம் என்ன?... அவர் ஒரு தேசத்தியாகி. அந்தத் தியாகத்தைப் போற்ற வேண்டும்; அந்தத் தியாகத்துக்கு நன்றி சொல்ல வேண்டும் என்ற கடமைதான் என்னை அவர் பக்கம் கணத்துக்குக் கணம் அழைத்துச் செல்கிறது. அவரை முதன் முதலாகச் சந்தித்தபோது, நான் அவருக்கு மண்ணில் மார்பு பதித்து வணங்கி, தெய்வத்திற்குப் போட்டிருந்த மாலையை அவருக்குப் போடவில்லையா?... நம்மையும் அறியாமலே நம்முன் சில சங்கற்பங்கள் கரு வு ற் று வளர்ந்து

விடுவதில்லையா?... -

‘நானும் அன்பர் அம்பலவாணனும் நண்பர்களாகப் பழகிளுேம். ஆணுல், அவரோ என் நட்பைக் காதலாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/167&oldid=663975" இலிருந்து மீள்விக்கப்பட்டது