பக்கம்:தாய் மண்.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168

உருமாற்றிக்கொண்டு என்னை மணக்க முன் வந்தார். எடுத்த எடுப்பில் மனம் சற்றே சபலம் கொண்டது. மானுடத்தின் ஆசாபாசங்களின் மனவிகாரங்களுக்கு நானும் சற்றே ஆளானேன். எல்லாம் ஒரு நொடிதான்! நொடியில் இறங்கு முன் தப்பித்துக் கொள்ளும் ரேக்ளாவைப் போல எனனே என் மனம் கட்டுப்படுத்தியும் விட்டது. அவரது அன்பு தூய்மையானது. ஆலுைம், சூழல்கள், அவரது அன்பை நெருப்பாகக் காட்டி பயமுறுத்தின! நானும் அவரும் தம்பதி யாளுல், அது செயற்கையாக உலகத்தின் கண்களுக்குப் படும் என்று ஒதுங்கி விட்டேன்!... “ஆம், அதுவும் வாஸ்தவமே! இப்போது நான் அன்பர் மோகன்தாளின் பேரில் நேசம் பூண்டொழுகுகிறேன். அதை ஒத்து அவரும் என்மீது நேசம் பாராட்டவே செய்வார். அவரது உள்ளார்ந்த அன்பும் பிரியமும் அவரது நேயத்தை விளக்கவில்லையா? சரி!... தியாகத்துக்கு-அதாவது, அவர் தாய் மண்ணுக்குச் செய்த தியாகத்துக்கு என்னேயே தியாகம் செய்வதாக நான் எழுதி யிருக்கிறேனே!- அது அவரின் இருதயத்தைக் குத்தாதா? சொல்லிக் கொடுத்த பாடமாக அச் சொல், என் செயலைக் கற்பித்துக் காட்டாதோ? அவர் ரொம்பவும் நுட்பமானவர். உணர்ச்சிகளைப் படிப்பவர். என் காதலைத் தவருக எண்ணி விடவும் சந்தர்ப்பம் இருக்கும்!- அப்படியென்றால், நான் அவரை மணம் புரிந்துகொள்ள விரும்புவதற்கு அர்த்தம் என்ன? நாட்டின் நிமித்தம் போராடி, தன் கால்களைப் பறி கொடுத்த புனிதமான சீலர் அவர். அவருக்கு நானே கால்களாக இருந்து பணிவிடை செய்வதன் மூலம் என் மனத்துக்கு ஒரு ஆறுதலையும் அதன் மூலம் என் மனிதாபிமானத்துக்கு ஒரு பூ ர ண த் ைத யு ம் உண்டாக்கிக் கொள்ள ஆசைப்படுகிறேன். பிறவி என்றால் அதற்கு ஒரு பயனும் ஒரு பொருளும் இருந்தாக வேண்டு மென்ற கொள்கையைப் பக்குவப் படுத்திக்கொண்டு வருகின்ற எனக்கு இக்கனவு பூர்த்தி பெற்றால் எவ்வளவோ மகத்தான அமைதி உண்டாகும். நான் எனக்காகத்தான் வாழ விரும்புகிறேன்!... நான் அவரைக் கல்யாணம் செய்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/168&oldid=663976" இலிருந்து மீள்விக்கப்பட்டது