பக்கம்:தாய் மண்.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

169

கொள்ள முன் வந்திருக்கும் இச் செயலில் என் மனப் பக்குவம்தான் முதலிடம் பெற வேண்டும்; அந்த மனப் பக்குவம்தான் என்னுடைய இக்கடப்பாட்டுக்கு ஒரு நிறை. சரி!... நான், ஊனமடைந்த மோகன்தாளை மணப்பது உலகின் கண்களுக்கு விந்தையாக - செயற்கைச் செயலாகப் பட்டால்...? வேடிக்கையான தர்க்கம்... குதர்க்கம்!... உலகுக்காக வாழ்ந்தவர்களின் கதை எனக்குத் தெரியாதா? எனக்கு என் வாழ்வுதான் லட்சியம்; என் கனவுதான் எனக்கு உலகம். இதே மோகன்தாஸ், நான் அவரை மணம் செய்து கொண்டபின் இதே முறையில் ஊனமடைந்துவிட நேர்ந் தால், அப்போது மட்டும் உலகம் எங்கள் ஜோடிப் பொருத்தத்தைச் செயற்கையாகக் க னி த் து வம்பு பேசாதா?...

“ஆம்: என்னைப் போலவே, அன்பர் மோகன்தாசும் மனத்தை மதிப்பவர். இலக்கிய அறிவு அவருக்கு அந்தப் பாக்கியத்தை அருளியிருக்கிறது. என்னுடைய வானொலிச் சொற்பொழிவைப் பாராட்டிப் பேசுகையில் அவரது எண்ணங்கள்-என் எண்ணங்களுக்கு உடன்பாடு கொண்ட கருத்துக்கள் புரிந்தனவே... என் ரேடியோ உரையிலே நான் கொண்டிருக்கிற ம ன த் த த் து வ த் ைத-என் லட்சியத்தை-என் கனவைத் தன்னுல் புரிந்துகொள்ள முடிந் ததாகச் சொன்னரே! நான் அவரிடம் வைத்திருக்கும் அன் பையும் பாசத்தையும் மரியாதையையும் கணக்கிட்டு, என்னை அவர் உள்ளத்தின் உள்ளே நேசித்துக் கொண்டுதான் இருப்பார். அவரது புதிய பார்வை அதற்கு அடையாளம். அவர் தன் இதயத்தை என்னிடம் திறந்து காட்ட மனம் துணியமாட்டார்- அவர் வசமுள்ள உடற்குறை காரண மாக!... ஆனல், நான் என் மனத்தை அவரிடம் நாளேக்கு வெளிக் காட்டும்பொழுது, அவர் துணிவுடன் என்னே-என். மனத்தை வரவேற்பாரல்லவா? எங்கள் மனம்-எங்கள் அன்பு-எங்கள் நேசம் சமுதாயத்துக்கு ஓர் அற்புதமாகவோ அல்லது அதிசயமாகவோ தோன்றாமல், ஒர் உண்மையின் கடமையாகத் தோன்றினல், அதுவே எனக்கு மகிழ்ச்சியை

தா. ம. 11

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/169&oldid=663977" இலிருந்து மீள்விக்கப்பட்டது