பக்கம்:தாய் மண்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

j?

புரட்டினள். நாள் தவருமல் புறப்படும் பிரளயம் அப்பொழுதும் அவள் மனத்தில் புறப்பட்டது. இனிஷியல்’ களுடன் கூடிய ஆசிரியை மார்களின் பெயர்களுக்கு மத்தியில் அவள் பெயர் மட்டும் இனிஷியல் இல்லாமல்-தலைப்புப் பெயர் இல்லாமல், வெறும் “தமிழரசி என்றிருந்தது. கை தடுக்கத்துடன் பேணுவைத் திறந்து, தன் பெயருக்கு நேராகத் தேதி பார்த்துக் கையெழுத்துச் செய்தாள். நெடுமூச்சு வடிந்தது. பிரளயமும் வடித்தது. எல்லாம் கைநொடிப் பொழுதுதான்!...

‘இந்த மண்ணில் பிறந்தால் மீண்டும் இந்த மண்னேச் சரண் அடையும் வரை, நாம் சந்தித்துத் தீர வேண்டிய சோதனைகளும் போராட்டங்களும் ஒன்றா, இரண்டா? எல்லா வற்றையும் நாம்தானே நேர்மையான நெஞ்சுரம் கொண்டு சமாளித்தாக வேண்டும்! அம்மம்மா!... -

தொடுத்த நினைவுப் பூவின் மனத்தில் மனம் தெளிந்து பூஞ்சிரிப்டை உதிர்ந்தவாறு, அவளுக்குரிய வகுப்பை இலக்கு வைத்து நடந்தாள்.

இனி, அவள் தமிழாசிரியை. இனி, அவள்தான் சட்டம், விதி எல்லாம்-அவளுடைய உலகத்திற்குள்!...

நேசிக்கிருன் !

இரண்டு திருவேற, உருவேறும்'- ஆம், மெய்தான். திரு ஏறி நின்ற அந்தப் புனிதக் கோயிலின் பாதங்களைத் தொட்ட தும், அன்பின் தண்மையும், சத்தியத்தின் பக்தியும், கடமை வின் மனச்சாட்சியும் ஒருருக்கொண்டு தமிழாசிரியை தமிழர

கியின் நெஞ்சைத் தொட்டன.

ஆம்; பள்ளிக்கூடத்திற்குள் அவள் அடியெடுத்து வைத்து விட்டாள் என்றால், அவளை விட்டுக் காலமும் கனவும் அடி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/17&oldid=663978" இலிருந்து மீள்விக்கப்பட்டது