பக்கம்:தாய் மண்.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170

ஊட்டும். ஆண்டவன்தான் அதற்குரிய சூழ்நிலையை உருவாக்கிக் கொடுக்க வேண்டும்!...”

இப்படிப்பட்ட நினைவுக் குவியல்களுக்கு மத்தியில் புரண்ட அவள், நாட்கள் சிலவற்றை இடை நழுவவிட்ட பின், அந்தத் திங்கட்கிழமை உபவாஸ்த்தின்போது முகத்தைக் கழுவிக்கொண்டு பக்தியுடன் பூஜையை முடித்த பின், அதே நிம்மதியுடனும் அதே சிந்தனைத் தெளிவுடனும் மீண்டும் ஒரு புதுக் கடிதம் வரைய முனைந்தாள். அன்று மோகன்தாஸைக் கண்ட தருணத்தில் அவளேயும் அறியாமல் அவளது உள்ளுணர்வில் ஏற்பட்ட அந்தப் புனிதச் சக்தி'யின் தென்புடன் வார்த்தைகளேக் கொட்டினள்.

ஒவ்வொரு சொல்லும் - சொல்லின் கோவையும் அவளது உள்ளார்ந்த அன்பிலிருந்து உதிர்த்தது. தெய்வம் என்னைச் சோதித்தது போதும்; நீங்களும் என்னைச் சோதித்துவிட மாட்டீர்களே?’ என்று எழுதியபோது, அவள் தன்னையும் அறியாமல் தேம்பிவிட்டாள். பிறகு, கடிதத்தை முடித்துக் கையொப்பம் செய்தாள். அக்கடிதத்தை நீலநிற உறை யொன்றில் பொருத்தினுள். சமயமறிந்து அக்கடிதத்தை மோகன்தாளிடம் சேர்ப்பிக்க வேண்டுமென்ற திட்டத்துடன் காற்றாட வாசல் பக்கம் வந்தாள். -

பாரதப் பிரதமர் லால்பகதூர் அவர்களின் சென்னை வருகைக்குக் கட்டியம் கூறின சுவரொட்டிகள். எத்துணை நிர்மலமாகப் புன்னகை பூக்கிறார் சாஸ்திரிஜி ஆஹா!...

“மாறிப் புக்கு இதயம்’

 இருபது பாரதப் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி அவர்களின் இதயம் ஒன்றிய - பரிசுத்தமான - உணர்ச்சி நிறைந்த - அற்புதமான அப்பேச்சைக் கேட்டு மகிழ்ந்தாள் தமிழாசிரியை தமிழரசி! நாட்டுப் பாதுகாப்பின் நிமித்தம் பொது மக்கள் ஏகோபித்த மன ஒற்றுமையுடனும் நாட்டுப் பற்றுதலுடனும்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/170&oldid=663979" இலிருந்து மீள்விக்கப்பட்டது