பக்கம்:தாய் மண்.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

171

ஆற்றி வரும் தேசப்பணிகளைப் பாராட்டினர். பொது ஜனங்களின் இந்த ஒற்றுமை உணர்ச்சி எப்போதுமே நிலவிப் பண்பட்டு வந்தால், அவ்வுணர்ச்சியே நாட்டுக்கு மாபெரும் பாதுகாப்புச் சக்தியாக அமையுமென்றும் அவர் குறிப் பிட்டார். பெண் குலத்தின் அழகிய நாட்டுச் சேவைகளையும் அன்புப் பண்புகளையும் புகழ்ந்தார். எல்லோருக்கும் நாட்டின் சார்பில் நன்றி தெரிவித்தார் ‘ஜெய் ஜவான்!......... ஜெய் கிசான்!” என்னும் மந்திர ஒலிகளை முழக்கிய வண்ணம், தம் பேச்சை முடித்தார் பிரதமர்.

கூட்டம் முடிந்ததும், போர்முனையில் பணி புரிந்த தமிழ் நாட்டுச் சிப்பாய்களைக் கண்டு கைகுலுக்கி அவர்கட்குத் தம் நன்றியை மீண்டும் தெரிவித்துக் கொண்டார்.

வீரர்களின் மத்தியில் ஜவான் மோகன்தாஸ் முதலிடம் பெற்றுத் திகழ்ந்த காட்சியை நினைத்தவாறு அவள் கடலோர மாக வீடு திரும்பிக் கொண்டிருந்தாள். அவள்: தமிழரசி,

வழியில், ‘தமிழரசி!’ என்ற அழைப்புடன் டாக்ஸி ஒன்று அவளே ஒட்டி நிற்கக் கண்டாள்.

டாக்ஸியில் மோகன்தாஸ் ராணுவ உடுப்புக்கள் மிளிர அழகாகக் காட்சியளித்தான். அவனது கைவிரல்களின் பிடிப்பில் ஊன்று கோல்கள் இருந்தன. “கூட்டத்துக்கு வந்தீர்களா?’ என்று கேட்டான்.

“ஆமாங்க!’ என்றாள் அவள்.

“டாக்ளியிலேயே வீட்டுக்குப் போயிடலாமே! வந்து ஏறிக் கொள்ளலாமே!’ என்று மிகவும் யோசனையுடன் விருப்பம் தெரிவித்தான். குரல் அழுத்தமாக ஒலிக்கவில்லை . தன் பேச்சை அவள் எப்படி எடுத்துக் கொள்வாளோ என்ற கவலையின் தயக்கத்துடன் அவனிடமிருந்து சொற்கள் வெளி வந்தன. சொல்லிவிட்டு, அவள் முகத்தை அவன் கவனித் தான். அதே நேரத்தில் டிரைவரும் பின்பக்கமாகத் திரும்பிப் பார்த்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/171&oldid=663980" இலிருந்து மீள்விக்கப்பட்டது