பக்கம்:தாய் மண்.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172

தமிழரசி ஒரு க ண த் தி ன் தாமதத்துக்குப்பின், “ஆகட்டுங்க!” என்றாள். அவன், தான் அமர்ந்திருந்த இடத்தின் கதவை அழுத்தித் திறந்துவிட்டான்.

அவள் ஏறிக்கொண்டாள்.

மோகன்தாஸ் மிகவும் ஒதுங்கி உட்கார்ந்துகொண்டான். அவனுடைய ஊன்றுகோல்கள் மாத்திரம் அவளுடைய கை ஸ்பரிசத்தில் அடங்கிக் கிடந்தன. அந்திக் கிரணங்கள் சிதறியிருந்தன.

தமிழரசியின் கன்னி மனம் அடங்காத மகிழ்வில் திளைத்துக் கொண்டிருந்தது. இப்படிப்பட்ட ஒரு சம்பவம் நிகழுமென்று அவள்தான் எண்ணியிருப்பாளா? இல்லை, அவன்தான் எதிர்பார்த்திருக்கக் கூடுமா?

ஆம்; சந் த ர் ப் பங் கள் சந்திக்கவில்லையென்றால், வாழ்க்கையில் சுவைகளின் சந்திப்புக்கும் இடமிருக்காது. அல்லவா?

மோகன்தாஸின் வீட்டின் வாசலில் வாடகைக் கார் போய்நின்றது. தமிழரசி முதலில் இறங்கினுள். மோகன்தாஸ்

இறங்குவதற்கும் உதவினுள். யார் யாரோ வேடிக்கை பார்த்தார்கள்.

அவள் அவனிடமிருந்து பிரிந்து வீடு வந்து சேர்ந்தாள். கதவைத் திறந்தவுடன், அவள் காலடியில் கார்டு ஒன்று கிடக்கக் கண்டாள். அவசரமாக அதை எடுத்துப் படித்தாள். அவள் மனம் புயல் வசப்பட்டது. அவள் மீண்டும் அக் கடிதத்தைப் படித்தாள்: - “குமாரி தமிழரசி:

நீ ராணுவ வீரர் மோகன்தாஸைத் திருமணம் செய்து கொள்ளப் போவதாக அறிந்து திடுக்கிட் டேன். அந்த நொண்டியைத் திருமணம் செய்து கொள்ளும் வலு உனக்கு உண்மையிலேயே உண்டா? என்னுல் நம்பவே முடியவில்லை. மற்றவர்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/172&oldid=663981" இலிருந்து மீள்விக்கப்பட்டது