பக்கம்:தாய் மண்.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

173

உன்னைப் பிரமாதமாக மதிப்பிட வேண்டுமென்று தான் நீ இப்படி டுப்’ அடித்துக்கொண்டு வருகிறாய்! பாவம்! அந்த ஜவான்! அவரை ஆசை காட்டி மோசம் செய்ய வேண்டாம்! நீ கேவலம் சாதாரண மானுடப் பிறவி என்பதை நான் அறிவேன். நீயும் அறிந்துகொள்! கெட்டிக்காரி புளுகு எட்டு நாளில் கூடவா அம்பலமாகாமல் போகும்?-பார்க்கலாமே! பிற பின் பு!......

இப்படிக்கு,

3 * * ****** *

அடியில் கையெழுத்து எதுவும் இல்லாமல் இருந்தது. அக்கடிதத்தின் கையெழுத்தை அனுமானம் செய்து கொள்ளவும் அவளால் முடியவில்லை. அக்கடிதத்தின் வாசகங்களைப் படிக்க படிக்க அவளுக்கு ஆத்திரம் ஆத்திர மாக வந்தது. ‘கடவுளே! நான் புகழுக்கு ஆசைப்பட்டா அன்பர் மோகன்தாஸைக் காதலித்துத் திருமணம் செய்து கொள்ளத் துடித்துக் கொண்டிருக்கிறேன்?... உலகத்தின் “பார்வை’ இத்துணை பயங்கரமானதா? அப்படியென்றால், என் லட்சியம் அர்த்தமற்றதா?...... ஊஹாம், இல்லை!...... இல்லவே இல்லை!...... யாரோ ஒருவன்-யாரோ ஒருத்தி என்பால் ஆத்திரப்பட்டு, அழுக்காறு கொண்டு எழுதியுள்ள “பூதிப்படியான கடிதம் இது! இதற்கு முகவரியில்லே: கையெழுத்து இல்லை. அதேபோல, இதற்கு நெஞ்சும் இல்லை!...... இக்கடிதத்தை அனுப்பிவிட்டால், அதன் மூலம் பயந்து நான் என் லட்சியத்தை விட்டுவிடுவேன் என்று எதிர் பார்த்திருப்பார்கள்!... பரிதாபத்துக்குரிய ஜன்மங்கள்!... ஆமாம், இந்த வேலையை ஒன்று ஜலஜா செய்திருப்பாள்; அல்லது அவளுடைய போலிக் காதலுக்குப் பாத்திரமான ஒரு ஆண் பிள்ளை செய்திருப்பான்......! கோழைகள்! ..’

அந்த அஞ்சலட்டையைச் சுக்கு நூருகக் கிழித்துப் போட்டுவிட எண்ணிள்ை. மறுகணம், அப்படிச் செய்யாமல்ே அதை எடுத்துப் பீரோவில் ஒர் உறையில் திணித்துவிட்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/173&oldid=663982" இலிருந்து மீள்விக்கப்பட்டது