பக்கம்:தாய் மண்.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174

அத்துடன் அதை மறந்துவிட்ட துணிவுடன் படுக்கையில் வந்து குந்தினள். பின்னர், முகத்தைச் சுத்தப்படுத்திக் கொண்டு வந்தாள் காத்திருந்த மாணவிகளின் கட்டுரை நோட்டுக்களைச் செம்மையுறத் திருத்தினுள், ட்யூஷன்” சொல்லிக் கொடுத்தாள்.

“நாளைக்கு எப்படியும் அன்பர் மோகன்தாஸ் அவர் களிடம் என் கடிதத்தைச் சமர்ப்பித்துவிட வேண்டும்!இந்த ஒரே நினைவுடன் அவள் அன்றைப் பொழுதைக் கடத்தினுள்,

இரவு வந்தது. எழுத்தாளர் மறைநாயகன் வந்தார். அதே தெருவின் இடது கோடியில்தான் அவர் வசித்தார். அவர் எப்போ தாவது வந்து தமிழரசியிடம் உரையாடிச் செல்வார். அவரை வரவேற்று, அவரது “ம்மா’ என்ற கதையினைப் புகழ்ந்துரைத் தாள் தமிழரசி.

“மோகன்தாஸ் அவர்களைச் சந்தித்துவிட்டுத்தான் வருகிறேன். அவருக்கு உங்கள் பேரில் நிரம்பவும் மதிப்பும் மரியாதையும் இருக்கிறது’’ என்றார் அந்தக்கதாசிரியர்.

அந்த எழுத்தாளர் தெரிவித்துச் சென்ற சொற்களின் கூட்டுறவில் அவள் இதயம் எவ்வளவோ சாந்தி எய்தியது. தெய்வத்தை எண்ணித் தொழுதாள். படுத்து எழுந்தாள்.

அடுத்த நாள் பள்ளியின் கடமைகள் நிறைவேறின.

அன்னை பட்சணம் சுட்டு வைத்திருப்பாள் என்ற குதுரகலப் பொலிவுடன் பள்ளியிலிருந்து வீடு நோக்கி விரையும் மாணவியைப் போல, ஆசிரியை தமிழரசியும் மனை நாடி விரைந்தாள்.

வீட்டை அடைந்து, பூட்டைத் திறந்தவுடன் சுற்று முற்றும் நோக்கினள். ஏதாவது மேற்கொண்டு அனுமதேயக் க்டிதம் வந்திருக்கிறதா என்று பார்த்தாள். அப்படி எதுவும் வரவில்லை. ஆறு பைசாவுடன் அந்த அனுமத்தேயத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/174&oldid=663983" இலிருந்து மீள்விக்கப்பட்டது