பக்கம்:தாய் மண்.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

175

தின் சினம் அடங்கிவிட்டது போலும் தன்னக் கண்டு மறுகி மறுகிச் சென்று மறைந்தாளே ஜலஜா!...

சீனக்காரனின் கள்ளத்தனமான ஊடுருவலைப் பற்றிய விவரம் வாசிக்கப்பட்டது - ரேடியோவில்!

தமிழரசி முகத்துக்குச் சோப்புப் போட்டுக் கழுவித் துடைத்தாள். கண்ணுடியின் முன் போளுள்.

மங்கலக் குங்குமம் இட்டுக் கொண்டாள்; மங்கள செளபாக்கியமும், மாண்புறு பொலிவும் கூடின. முகத்தில் லட்சுமீகரம் களை கூட்டியது. நிலைக் கண்ணுடியிலிருந்து பிரிந்தாள் தமிழரசி, உள்ளத்தின் உள்ளே, நூதனமான ஆனந்தம் கிளை பிரிந்தது. கண்டுகொண்டிருந்த இன்பக் கனவின் மயக்கமும், அக் கனவு பலிக்க வேண்டுமேயென்ற பிரார்த்தனையும் அவள் வடிவில் இயங்கின. பரவியிருந்த மகிழ்ச்சி தவித்தது, அதுவே, ஓர் இன்ப வேதனையாகவும் பரிமளிக்கத் தொடங்கியது. சுரிகுழல் உச்சியில் இருந்த ஒற்றை ரோஜாப்பூவின் புனிதமான பரிமளம் அவளது தூய நெஞ்சை நிறைத்தது, நெஞ்சின் இனிய நற்கனவை நினைத்தது.

நிலவு மயங்கியும் மங்கியும் வீசிக்கொண்டிருந்தது. வீசிக் கொண்டிருந்த சீதளக் காற்று கனிந்தும் கனத்தும் இருந்தது.

“மோகன்தாஸ்!” பெயரை எழுத்து எழுத்தாகப் பிரித்து உச்சரித்தாள். உச்சரித்த வாய் இனித்தது: மணத்தது. ஒலி வடிவம் பெற்று எதிரொலி வடித்த இதயம் இனித்தது. மணத்தது.

எண்ணினுள். எண்ணிய கணத்தில் அவன் தோன்றினன். வீரம் பொலிந்த முகப் பொலிவு. அன்பு கனிந்த கண் மலர்ச்சி: பாசம் சிலிர்த்த இதழ்ச் சிரிப்பு.

மோகன்தாஸை முதன் முதலாகச் சந்தித்த மாண்பு மிக்க அந்த நேரத்தை ஞாபகப்படுத்திக் கொண்டாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/175&oldid=663984" இலிருந்து மீள்விக்கப்பட்டது