பக்கம்:தாய் மண்.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176

ஞாலத்தின் அதிசயத்தைக் காட்டிய கால அருமையாக அந் நேரம் தோன்றியது.

மேஜைமீது கண் பார்வைக்கு உகந்த காட்சியாக இருந்த அந்த இளநீல வர்ணக் கவரை மீண்டும் பார்த்தாள்: பார்வையை மீட்டிப் பார்த்தாள். இதய வீணையின் தந்தி களை மீட்டிப் பார்த்தாள்,

அன்பும் பாசமும் காதலெனும் உணர்வாகக் கசிந்தன.

தமிழரசி மெய்ம்மறந்தாள்.

மெய்ம்மறந்த நிலையில், மத்தியான்னம் பள்ளிக்கூடத் தில் அவள் பாடம் சொல்லிக் கொடுத்த கட்டம் அவளது நுண்ணறிவின் பாராட்டுக்கு ஆளானது.

விசுவாமித்திர மா மு னி வ ரு ட ன் இராமபிரானும் இலக்குமணரும் மிதிலைக்கு வருகிறார்கள். வீதியில் வந்து கொண்டிருக்கும் அஞ்சனவண்ணனைப் பார்த்த பெண்கள், “இந்த இராமச்சந்திர மூர்த்தியே நம் சீதைக்குப் பதியாக வேண்டும்’ என்று வாய் நிறைய வாழ்த்துகிரு.ர்கள்.

கன்னி மாடத்தில் இருந்த மிதிலைச் செல்வி சீதை சாளரத்திலிருந்து கீழே நோக்குகிருள். இராமபிரானைக் கண்டாள். இராமபிரானும் சீதையைப் பார்த்தார்.

சீதையும் இராமரும் ஒருவரையொருவர் நோக்கி இரு வரும் மாறிப் புக்கு இதயம் எய்தினர்; அவர்கள் இருவரும், ‘இரண்டு உடற்கு உயிர் ஒன்று ஆயினர்!

இக்காட்சியை விவரித்தபோது தன்னையும் மீறிய இன்பக் களிப்பு எய்தினுள் அவள். இப்போது அந்நிலையினை எண்ணிப் பார்த்தபோது, இன்பக் கிளர்ச்சி அடைந்தாள். சீதையாகத் தன்னைப் பாவித்துப் பார்த்தாள். அவளது இளம் மேனி புல்லரித்தது! o:

அவள் தன் வயப்பட வினாடிகள் சில பிடித்தன. பின்னர், ஏதோ சிந்தனையுடன் பீரோவைத் திறந்தாள். பாங்குச் சேமிப்புப் புத்தகத்தை எடுத்தாள். பிரித்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/176&oldid=663985" இலிருந்து மீள்விக்கப்பட்டது