பக்கம்:தாய் மண்.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

177

இருப்பில் இருந்த தொகைப் புள்ளியைக் கண்பார்த்தாள். “ஆயிரத்துப் பத்து’ என்று தனக்குள் முனு முணுத்துக் கொண்டாள். எள்ளினுள் எண்ணெய் என அவளுள் ஒரு நிறைவு பூத்தது. பொன் செய்யும் மருந்து கிடைத்தது!

பீரோவின் மேல் தட்டில் புத்தம் புதிய கதர் வேஷ்டியும் கதர் சொக்காயும் இருந்தன. ஏர்முனைத் திருநாளன்று மோகன்தாசுக்குப் பொங்கல் பரிசளிக்கப் போகின்றாள்!

கனவு கண்டு விழிப்புப் பெற்ற நிலையில் அவள் தலையைச் சிலுப்பிக் கொண்டாள். ஒற்றை ரோஜாப்பூவின் இதழ் ஒன்று உதிர்ந்து அவளது சீரடிகளைச் சார்ந்தது. பீரோவை அடைத்தாள். -

ஆசைக் குழவியைத் தொடுவதுபோன்று, அந்த இளநீல வர்ணக் கவரைப் பவித்திரத்துடன் எடுத்துக் கச்சைக்குள் செருகிக்கொண்டு, வீட்டின் சாவியுடன் அவள் வெளியேறி ள்ை. அவள் கால்கள் மோகன்தாஸின் வீட்டை நோக்கி நடந்தன. எனது மதிப்புக்கும் அன்புக்கும் உரிய தங்கட்கு!” என்ற தொடக்கம் அவள் நெஞ்சில் எழுந்தது. பிறகு, ‘தெய்வம் என்னைச் சோதித்தது போதும்; நீங்களும் என்னைச் சோதித்துவிட மாட்டீர்களே?’ என்ற வரிகளும் அவளது குமரி மனத்தில் விளையாடின.

கூர்வேல் நெஞ்சில் விளையாட அவள் நடை தொடர்ந் தாள். கோடியிலிருந்த ஸ்ரீதண்டு மாரியம்மனத் தொழுத

படி நடைதொடர்ந்தாள்.

கேள்வி ஒன்றைத் தெய்வத்தின் முன்னே வைத்துவிட்டு, அந்தக் கேள்விக்குரிய விடையைப் பெறுவதற்காக அவள் அதோ, நடந்து கொண்டிருக்கிருள் - அந்தத் தெய்வத் திடமே! -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/177&oldid=663986" இலிருந்து மீள்விக்கப்பட்டது