பக்கம்:தாய் மண்.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* அழகு எனும் தெய்வம்! 5

இருபத்தொன்று

“வணக்கம்!” என்று சொல்லிய கையோடு, கைகளைக் கூப்பி வணங்கியவாறு உள்ளே அடியெடுத்து வைத்த தமிழரசி, புதியதோர் உறவின் தோரண வாயிலில் அடியெடுத்து வைத்த புளகத்துடன் கூடத்தை அடைந்தாள். புதிய மனமும் புதிய கனவும் அவளை அரவணைத்துக் கொண் டிருந்தன. -

கிள்ளை மொழிப்பிள்ளை ஒன்றை அள்ளி அணைத்து உச்சி மோந்தவாறு உட்கார்ந்திருந்த மோகன்தாஸ், வணக்கம்’ என்ற அறிவிப்பைக் கேட்டுத் தலை நிமிர்ந்து, குரலுக்குடைய வளை இனம் கண்டு மனம் மலர்ந்து, “வணக்கம்... வாங்க!” என்று வணங்கி வரவேற்றான்.

பேசும் பொற் சித்திரத்தின் எழிலார்ந்த மயக்கத்தில் சிந்தை பறி கொடுத்த வண்ணம், மென்னகை புரிந்தவளாக, வழக்கம் போல அமரும் இடத்தை அடைந்து உட்கார்த் தாள். ஒரு முறை அவள் தன்னைத் தானே பார்த்துக் கொண் டாள். மார்பின் மையத்தில் அந்தத் தங்கச் சங்கிலி வெகு எடுப்பாக மின்னியது.

அவனது இன்ப அரவணைப்பில் சுகம் சேகரித்துக் கொண் டிருந்த பிள்ளைக்கனியமுது, புது முகத்தைக் கண்டதும் பொக்கை வாயைக் காட்டி, அதில் அடங்காச் சிரிப்பினை அடக்கிக் காட்டி, தமிழரசியிடம் தாவிப் பாய்ந்து நத்தியது.

பொங்கிப் புரண்ட பூரிப்புடன் குழந்தையை ஏந்தினுள் அவள்.

‘செளக்கியமா?’ என்று குசலம் விசாரித்தான் அவன். “ஆமாங்க!... நீங்க...?’ “நான் நல்ல சுகம்... நெள ஐ ஆம் கொயட் ஒ. கே!...” அவன் சிரிக்க, அவள் சிரிக்க, மதலையும் சேர்ந்து சிரித்தது. .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/178&oldid=663987" இலிருந்து மீள்விக்கப்பட்டது