பக்கம்:தாய் மண்.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

179

சிரிப்பின் இனிய ரேகைகள், சிந்திக்கொண்டிருந்த ஒளித், திரட்சியில் மின்னின. --

தமிழரசி தானும் குழந்தையாகி, குழந்தையிடம் கொஞ்சி விளையாடி, கெஞ்சி விளையாட்டுக் காட்டிக்கொண் டிருந்த கோலத்தை ரசித்த மோகன்தாஸ், பக்கவாட்டில் இருந்த புத்தகத்தை எடுத்து அதிலிருந்த புகைப்பட மொன்றை ஒரு முறை நுட்பமாகப் பார்த்தான்; பிறகு, அப்படத்தை இருந்த இடத்தில் பொருத்தினுன்; புத்தகமும் இருந்த இடத்தை அடைந்தது. அவன் பார்வையில் ”டிரான்ஸிஸ்டர் விழுந்தது. ட்ரான்ஸிஸ்டர் பத்திரமாக இருந்தது. உண்மையான உள்ளம் பூண்ட திரையுலக நடிகர் ஒருவர் அன்புமனம் கொண்டு, அவனுக்கு அன்பளிப்புச் செய்தது அது! இயக்கினன்,

குழந்தை சொல்லாமல் கொள்ளாமல் வீரிட்டு அழுதது. அழுததுடன் நிற்காமல், அவளுடைய மார்பகத்தைக் குறி வைத்துத் தன் செப்புவாயை அழுத்த முரட்டுத்தனமான முயற்சியைக் கையாண்டது. அச்சமும் நாணமும் அவளைத் தவிக்கச் செய்தன. முகம் வேர்வையால் நிரம்பியது.

இந் நிலையைக் கவனித்து விட்டான் அவன். உடனே தடுமாற்றத்துடன் பிள்ளையை அவன் வாங்கிக் கொண்டான். அவளைப் பார்க்கவும் அவனுக்கு வெட்கம. ஆளுல், அவளைப் பார்க்காமலும் இருக்க முடியவில்லை. எப்படியோ பார்த் தான். ஏனே பார்த்தான். இந்த இரு வேறு நிலைகளுக்கும் அர்த்தம் இல்லாமலா? - -

அவள் நளினமான முறுவலில் நாணத்தைக் கலந்தாள். இப்படியொரு காட்சியைத் தமிழ்ப்படமொன்றில் அபூர்வ மாகக் கண்டு போற்றி ரசித்த அவளது ரசிகத் தன்மைக்கு. நல்ல சோதனை நிகழ்த்திவிட்டது. அந்தச் செல்வக் களஞ்சியம். - “ .

திடீரென்று அடங்கிய குழந்தை, இப்போது திடீரென்று, மீண்டும் அழத் தொடங்கியது. . . . . . - - அவள் கூர்மையாகப் பார்க்க வேண்டியவள் ஆனுள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/179&oldid=663988" இலிருந்து மீள்விக்கப்பட்டது