பக்கம்:தாய் மண்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



பிரித்து விடைபெற்று விலகி விடும். அலுவல் நேரங்களில் அவளுக்குக் கடமைதான் உலகம், அவ்வுலகத்திலே அவளுக்கு நீதியும், நேர்மையும்தான் மனச்சாட்சி. அம்மனச்சாட்சி தான் அவளுக்குத் தெய்வம்,

தேசீய கீதத்துடன் பள்ளிக்கூடம் ஆரம்பமானது. தமிழரசியின் வகுப்பு தமிழ் மறை” யின் கடவுள் வாழ்த் துடன் ஆரம்பமாயிற்று.

“தமிழ்த்தாய் வாழ்த்து’, முதல் பாடமாக அமைந்தது. பொங்கி வந்த பாசத்துடனும், பூரித்துப் பல்கிய அன்புடனும் பாடத்தை நடத்திளுள். தமிழ்ப் பேராசிரியரின் கவிதை மனத்திற்குக் காவிய மணம் ஊட்டி விளக்கங்களைக் கொடுத்தாள் தமிழரசி, தன்னேரில்லாத த மி ழி ன் பால் இயல்பாகவே அவளுக்கு இருந்த புற்றும் பாச மும் சொற்பெருக்கில் ஊடும் பாவுமாக உயிர் கொண்டு ஒலித்தன. பாடலில் உயிரும் நினமுமாகப் பொதிந்து இருந்த நாட்டுப்பற்று, தேசிய ஒருமைப்பாட்டுத் தத்துவம், தெய்வநீதி, தாய்த்தமிழின் புகழ் போன்ற நிலைகளுக்கு விரிவு மிக்க ஆதாரபூர்வமான நிலைக்களன் அமைத்து விவரித். தாள், முன்னிருந்தபடி இருக்கும் எல்லையறு பரம்பொரு ளாக எத்திசையும் புகழ் மணக்க இருக்கும் தமிழ் அணங்கின் சீரிளமைத்திறம் வியந்து, செயன் மறந்து வாழ்த்திய பேராசி ரியருக்கு நன்றி சொன்னுள், தமிழாசிரியை,

“வட வேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகத்தில் கன்னித் தமிழ் பெற்ற பண்டைச் சிறப்புக் களைக் கோடிட்டுக் காட்டினள். அமரகவியின் தமிழ்த்தாய்” என்னும் அற்புதச் சித்திரத்தில் வலியுறுத்தப்பட்டிருந்த “புகழ் ஏறிப் புவியிசை என்றும் இருப்பேன்’ என்கிற தமிழ்த் தாயின் வாய்மொழியின் உரத்தை -உண்மையை மிக அழகாக அவள் எடுத்துரைத்தாள். தொண்டர் நாதனத் தூதிடை விடுத்தது, முதலே உண்ட பாலன அழைத்தது, எலும்பு பெண்ணுருவாகக் கண்டது, மறைக்கதவினைத் திறந்தது போன்ற தெய்வச் சிறப்புக்களைச் செய்து சிறப்புக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/18&oldid=663989" இலிருந்து மீள்விக்கப்பட்டது