பக்கம்:தாய் மண்.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180

பாவம், அங்கேயும் பாலமுத வேட்டை நடத்திக்கொண் டிருந்தது. ‘தங்கச்சி!’ என்று குரல் கொடுத்தான்.

ஒன்றும் பிடிபடாத அதிர்ச்சியுடன் விழித்துக் கொண் டிருந்தாள் தமிழரசி.

‘குழந்தை பக்கத்து வீட்டுச் சொத்து. அதை அனுப்பிச் சிடலாம்.”

சீதை கெட்டிக்காரப் பெண். குழந்தையை வாங்கித் தோளில் சாமர்த்தியமாகச் சாத்திக்கொண்டு போய்ச் சேர்ப் பித்துவிட்டு மீண்டாள். ‘உங்க பேச்சைக் கேட்டேன். ரொம்பவும் பிரமாதமாக இருந்திச்சுங்க, டீச்சர்!... இதைப் பாடப் புத்தகத்திலே கட்டாயம் சேர்க்கணும். நல்லாயிருக் கும்!’ என்றாள் சீதை.

குழந்தைக் கனவில் மனம் குழைந்திருந்த தமிழரசியின் காதுகள் சீதையின் ஆசையை வாங்கிக் கொள்ளத் தவற வில்லை. ‘சொல்லுறதோ, இல்லை, கேட்கிறதோ, அல்லது படிக்கிறதோ வாழ்க்கை இல்லை. செய்து காட்ட வேணும், சொன்னபடி!... அதுதான் வாழ்க்கை! அதுக்கும் ஒரு மனம் வேணும். அதிர்ஷ்டமும் வேனும்!” என்றாள். பேசி நின்றதும் அவள் உடல் கிடுகிடுத்தது. அவளது அடிமனத் தின் ஒர் ஒரத்தில், அவளுடைய உள்ளுணர்வுக்கும் புரியாத ரீதியில் ஏதோ ஒரு வகைச் சலனம் பிறந்தது. அவள் தன்னை உணர்ந்த கணத்தில், “நீங்க சொல்றது. மெய்தான், டிச்சர்!’ என்று ஆமோதித்தாள். சீதை உள்ளே சென்றாள். “அக்காள் என்று சொந்தம் கொண்டாடுவாள்: இப் போதுதான் நான் அவளுக்கு உச்சராகத் தெரிகிறேன். எல்லாம் நன்மைக்கே! நமட்டுச் சிரிப்புக்கு வேலை வைத்து விட்டாள்.

அப்போதைய மங்கிய நிலவைப்பற்றி அந்த ட்ரான் விஸ்ட'ருக்கு எப்படித் தெரிந்தது? -

மங்கியதோர் நிலவினிலே!” என்று பாட்டுப் படிக்கத் தொடங்கியது. - - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/180&oldid=663990" இலிருந்து மீள்விக்கப்பட்டது