பக்கம்:தாய் மண்.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

181

அவன் கேட்டான். அவளும் கேட்டாள். வரிக்கு வரி அவன் ஆழமாக அனுபவித்தான். ரசிப்பின் தூதுவர்களாக, அவனது உணர்ச்சிக் குறியீடுகள் அவன் முகத்தில் நாட்டிய முத்திரை பிடித்தன. .

வரிக்கு வரி அவளும் ரசிப்புத் தன்மையைக் காட்டினள். இருந்தாலும், அவளை அணைந்த வெட்கத்தையும் காட்டி விட்டாள்.

அந்தப் பாடலில் வருணனை ஒவ்வொன்றும் எத்துணை துல்லிதமாக அவளுக்கும் பொருந்தி வருகிறது!...

“ஆம்; அழகு எனும் தெய்வம்! - தன்னை மறந்த லயந்: தனில் முடித்தான் மோகன்தாஸ். அவன் கைகள் அவளே நோக்கிக் குவிந்தன.

தமிழரசிக்குப் புல்லரித்தது; உதடுகள் துடித்தன. சாப்பிட்ட விவரம் கேட்டான் அவன். சாப்பிட்டதாகப் பொய்’ சொன்னுள் அவள். அவளேயும் கேட்காமல், வந்த பொய் அது. பொய்யை ஏன் சொன்னாள்? அவன் நேரத்தோடு சாப்பிட்டு விட்டான். “சும்மாயிருந்து பழக்கமில்லன்னு மேலிடத்திலே தெரி யப் படுத்தினேன். எழுத்துச் சம்பந்தப்பட்ட ஒரு வேலை போட்டுத் தருகிறதாகச் சொல்வியிருக்காங்க. துப்பாக்கிப் பிடிச்ச கைக்குப் பேணு வரப்போகு து!...” ஏக்கம் தொனித்தது.

அப்போது, வானத்தில் ஆகாயக் கப்பலொன்று பறந்த சத்தம் கேட்டது. அவனுக்கு யுத்த முனையின் நினைவு பீரிட்டிருக்க வேண்டும். கோலி சலாவ்... ஆகேபடோ!...” என்று சொல்லிக்கொண்டே துப்பாக்கியைத் தேடினன். அந்தப் பதட்டத்தின் தடுமாற்றம் அவனே நாற்காலியிலிருந்து கீழே சாய்த்துவிடப் பார்த்தது. நல்ல வேளையாக. அடுத்த முறையாகவும் தமிழரசி அவனைத் தற்காத்தாள். “மிஸ்டர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/181&oldid=663991" இலிருந்து மீள்விக்கப்பட்டது