பக்கம்:தாய் மண்.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i82

மோகன்தாஸ்! அது நம்ம விமானம். சுட்டுப் பிடாதீங்க!” என்று தடுத்தாள்.

அவள் பேச்சை நம்பி, அவன் மெய்யுணர்வடைந்தான் அவர்கள் இருவரும் சிரிப்பைப் பரிவர்த்தனை செய்து கொண்டனர்.

மணி எட்டு இருபது. தெருவோடு போன ஒரு விஷமக் கொடுக்கு, அவ்வீட்டின் முன்னே மணியை வலுவாக அடித்துக்கொண்டு மெதுவாகச் சைக்கிளேச் செலுத்திச் சென்றான்.

மார்பில் புரளும் தாலி மார்டை உறுத்துமா? உறுத்தாது! - அதுபோலவே, அந்த இளநீல வர்ண உறையும் உறுத்த வில்லை. அதைத் துரிதமான நாகரிக மென்மையுடன் லாவக மாக எடுத்து வைத்தாள்.

“வேறே என்னங்க விசேஷம்?’ அவன் முரண்டு செய்த சங்கீதத்தை அமர்த்தின்ை. சுவரில் தொங்கிய மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் பாராட்டைப் பார்த்தவாறு இருந்த தமிழரசி, அவன் பக்கம் திரும்பினள். இருக்கையிலிருந்து எழுந்து கடிதத்தை அவ னிடம் சமர்ப்பித்தாள். - .

அவன் வாசித்தான். “எனது மதிப்புக்கும் அன்புக்கும் உரிய தங்கட்கு:

- நான்தங்களைச் சந்தித்த முதற் சந்திப்பு என்னுடைய

வாழ்க்கையிலே மறக்கமுடியாத புனித நாளாகும்.

வீரத்தையும் தியாகத்தையும் நேரிடையாகத் தரிசிக்க இந்த அைைதப் பெண்ணுக்கு ஒரு பொன்னை சந்தர்ப் பத்தை அளித்தீர்கள். நான் கொடுத்து வைத்தவள். -

அதல்ைதான் உங்களிடம் இப்போது வரம் ஒன்று கேட்க ஊக்கம் கொண்டு வந்திருக்கிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/182&oldid=663992" இலிருந்து மீள்விக்கப்பட்டது