பக்கம்:தாய் மண்.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

183

என் பிறவிக்குப் பயன் வேண்டும்; அதற்குப் பொருளும் வேண்டும்,

அந்தப் பாக்கியத்தை எனக்கு அருளும் புனிதக் கருணை வள்ளலாகத் தாங்கள் அமைய வேண்டும்,

தங்களை-தங்கள் மனத்தை-தங்களது வீரத்தைதங்களுடைய நாட்டுப் பற்றை - தங்கள் தியாகத்தை நான் என்னுடைய இதய பூர்வமான அன்பால்-அன்பின் மனத்தால் - மனத்தின் துய்மையால் நேசிக்கிறேன்.

“எடுத்தும் கொடுத்தும் அன்பை வாழ்த்தினால், அந்த அன்பு வாழ்ந்து விடும்!’ - நீங்கள் அடிக்கடி சொல்லி வந்தது எனக்காகத்தானே?

தங்கள் உள்ளன்பும் மனதர்மமும் என்னை வாழ்த்தி, வாழ வைக்குமென்றே நான் கனவு காணுகிறேன். தெய்வம் என்னைச் சோதித்தது போதும்! நீங்களும் என்னைச் சோதித்து விடமாட்டீர்களே?... அப்படியென்றால், நான் இனி அளுதை அல்லள்!

தங்களது அன்பிற்குரிய,

-தமிழரசி.”

கடிதம் முடிந்துவிட்டது.

அவன் அவளை நடுக்கத்துடன் ஏறிட்டுப் பார்த்தான். பிறகு, தனக்கு இரு மருங்கிலும் இருந்த அந்த இரண்டு ஊன்று கோல்களையும் பார்த்தான். அப்புறம், திரும்பவும் ஒருமுறை அவளைப் பார்த்தான்.குற்றம் செய்துவிட்டு குழந்தை அச்சத்தோடு தாயைப் பரிதாபமாகப் பார்க்காதா, அதை நினைவூட்டியது அவன் நோக்கு. -

“கடைசியிலே, இப்படி என்னைச் சோதிச்சிட்டீங்களே, தமிழரசி?’ என்று அவன் உதடுகள் துடிக்கத் தாழ்.குரலில் கேட்டான். அவனுடைய இமையோரங்களில் பணித்துளிகள் சேர்ந்தன. ஒன்றிரண்டு சிதறி விழுந்தன. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/183&oldid=663993" இலிருந்து மீள்விக்கப்பட்டது