பக்கம்:தாய் மண்.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184

அவளுக்குப் பொறி கலங்கிவிட்டது. கண்புலன் அறிவு மங்கி வந்தது. எதிரில் இருந்த அவனது கம்பீரமான உருவம், சலனமடைந்த நீரில் பார்ப்பதுபோலத் தெரிந்தது. “என்ன சொல் lங்க நீங்க?” என்று திகிலுடன் வினவினுள் தமிழரசி. நெஞ்சை ஏதோ ஒரு சக்தி அடைப்பது போலிருந்: தது. சமாளித்துக்கொண்டாள்.

‘நீங்க அளிக்க முன் வந்த இந்த மகத்தான பாக்கியத்தை அங்கீகரிக்க முடியாத நிலைமையிலே நான் இருக்கிறேன். அதுக்காக என்னை நீங்க பெரிய மனசு பண்ணி மன்னிச்சிட வேணும். எனக்காக ஏற்கனவே ஒரு காதலி ரொம்பக் காலமாய்க் காத்துக் கிட்டிருக்கு! நீங்க என்னைத் தயவுசெஞ்சு தப்பாய் நினைச்சுக்கா தீங்க!...” என்று அவன் சொல்லிய பேச்சின் ஒலி மறைவதற்குள், கீழே மறைந்து கிடந்த அந்தப் படத்தைப் புத்தகத்திலிருந்து எடுத்து அவளிடம் காண் பித்தான்.

களே சூட்டித் திகழ்ந்த பூங்கொடியின் வதனத்தை அவள் படத்தில் பார்த்தாள். ‘பூங்கொடி என்கிற இந்தப் பெண் தான் என்ளுேட வருங்கால மனைவி!’ என்றான் அவன்.

கண் இமைக்கும் நேரம், கண்களை இமைக்காமல் இருந் தாள் தமிழரசி. அந்த இமைப்பொழுதிற்குள் எந்தக் கடல் பொங்கி அவளை அரவணைக்கத் துடித்ததோ? எந்தப் புயல் சுழன்று வீசி அவளைத் திக்குமுக்காடச் செய்ததோ? எந்த எரிமலை கனன்று அவளைத் திமிலோகப் படுத்தியதோ?...

சிறுகச் சிறுக, அவள் நல்லுணர்வு எய்தினுள். இப்போது, அவள் சோர்வு இல்லாத சிரிப்பை வெளியேற்றினுள்.

கடல் என்றால் அடங்காதா, என்ன? புயல் என்றால், ஒரு நாள் ஒயத்தானே வேண்டும்? எரிமலை என்றால், அது சினம் தணியாமல் இருக்க முடியுமா?

“என்னை மன்னிச்சிடுங்க, மிஸ்டர் மோகன்தாஸ் . உங்க நிலை எனக்குத் தெரியாது! என் பிழையைப் பொறுத்துக் குங்க!’ என்று வேண்டினுள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/184&oldid=663994" இலிருந்து மீள்விக்கப்பட்டது