பக்கம்:தாய் மண்.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

185

மேஜை பரப்பில் ஊசலாடிக் கிடந்தது கடிதம். அவள் பேச்சினிலே வைரம் விளைந்தது. சுடச்சுடரும் பொன்னக அவளது அழகிய முக விலாசம் புனிதம் பூண்டு பொலிந்தது.

‘விடை தாருங்கள். போய் வருகிறேன்!” எழுதிப் படிப்பது போன்று அவள் பேசினுள். ‘நல்லதுங்க!...” மோகன்தாஸ் பச்சிளங் குழவி ஆனன். சேலைத் தலைப்பால் முகத்தைத் துடைத்துக்கொண்டு குமாரி தமிழரசி விடைபெற்றாள். தலையில் சூடியிருந்த ரோஜா இதழ்கள் வெளிறிச் சிதறின.

மங்கிய நிலவு மயங்கி மயங்கித் துணை சென்றது. வரும் விதி இராத் தங்குமா, என்ன?...

சாவித்திரிக்குக் காப்பு

இருபத்திரண்டு

வீட்டுப் பூட்டைத் திறந்துகொண்டு தமிழரசி உள்ளே நுழைந்தவுடன், முதல் அலுவலாகத் தண்ணிர்ப் பானையை அணுகி, நாலைந்து குவளைத் தண்ணிரைக் குடித்தாள் மித மிஞ்சிய தாகமாக இருக்கலாம்; அல்லது, மனக் கொதிப்பு தாங்க முடியாதபடி இருந்திருக்கவும் கூடும். மேற்கொண்டு தேவையில்லை என் னு ம் அளவுக்குப் பருகிவிட்டதாக அவளால் உணர முடிந்தது. சாப்பிடாமலே அவளுக்கு ஏப்பம் பறிந்தது. பசியை அடக்கவும் நீர் அருந்தியிருப் பாளோ? - -

ஆங்கிலச் செய்தி வாசிப்பு காற்றில் மிதந்து வந்தது. வெளிக் கதவுகளை மூடிவிட்டு, கூடத்தில் இருந்த படுக் கையை விரிக்காமல் அதன்மீது குந்தினுள் அவள். இடது

தா. ம. 12

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/185&oldid=663995" இலிருந்து மீள்விக்கப்பட்டது