பக்கம்:தாய் மண்.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186

கை விரல்களில் பதுங்கிச் சுருண்டிருந்த காகிதத்தை விரித்த போது, அது மோகன்தாஸின் விலாசம் எழுதப்பட்டிருந்த கவர் என்பது புரிந்தது. ஏன் அது மாத்திரம் அவளிடம் திரும்பிவிட்டது? அவளது காதற்கனவுக்கு ஒரு நினைவுச் சின்னம் வேண்டுமே என்றா?

குழந்தையைத் தாய் அடித்து விடுகிருள். குழந்தையோ செருமிக்கொண்டு, அடித்த தாயையே சரண் அடைகிறது.

முருகனைச் சரண் அடைந்தாள் தமிழரசி.

அவன் வேல் முருகன் ஆனன்.

வேல் விளையாடி விட்டது.

வேல் விளையாடியதா?...

ஊஹஅம்!

வினை விளையாடியது.

வினையா விளையாடியது?...

அல்ல!

விதி விளையாடிவிட்டது!

விதி விளையாடி விட்டதா?

பொய்!

மோகன்தாஸ் அல்லவா விளையாடி இருக்கிருன்:

அவள் இதயத்தைத் திறந்து வைத்துக்கொண்டு, கண் களை மூடிக்கொண்டாள். கண்ட கனவைக் கண்களுக்கு இடையில் புதைத்து வைக்க விரும்பினளோ? இன்பக் கனவு கண்டதாகவோ அல்லது, அந்தக் கனவு துன்பத் தைப் பரிசளித்ததாகவோ அவள் அசந்து மறந்தும்கூட நினைக்கக்கூடாது என்கிற நிர்ப்பந்தத்துக்குக் கட்டுப்பட்ட வளாக, அவள் இயல்பானதொரு தோரணையுடன் நேத்திரங் க2ள மலரச் செய்தாள். அப்போது, உடலுறுப்புக்களில் உறைந்திருந்த உதிரம் முழுவதும் மண்டைக்கு ஏறிவிட்ட தற்குச் சரியாக அவள் மூளை கொதித்தது. நான் கொடுத்து வைக்கவில்லை; அதனல்தான், அன்பர் மோகன்தாவின் அன்பை என்னல் எடுத்துக்கொள்ளக் கூடவில்லை!"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/186&oldid=663996" இலிருந்து மீள்விக்கப்பட்டது