பக்கம்:தாய் மண்.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

187

இத்தகைய பயம் மண்டிய திருப்பம் ஒன்று தனக்கு ஏற்படுமென்று அவள் எதிர்பார்த்தாளா? இப்படிப்பட்ட துன்பம் அவளது இலட்சியத்தின் முடிவுக் கட்டமா? இம் மாதிரியான ஏமாற்றம்தான் அ வ ள் வாழ்க்கையா? ஐயையோ!-என்ன வாழ்க்கை இது!...

“தெய்வம் என்னைச் சோதித்தது போதும்; நீங்களும் என்னைச் சோதித்துவிட வேண்டாம்!’ என்று அவள் தம்பிய “அந்தத் தெய்வ'த்திடமே வின எழுப்பி, அதே வினவுக்கு விடை வாங்கி வர அந்தத் தெய்வ'த்திடமே எவ்வளவு நம்பிக்கை கொண்டு சென்றாள் அவள்?-ஆளுல், நடந்தது என்ன? முடிந்தது என்ன? அந்த வரிகளை எழுதியபோது, அவள் கண்கள் கண்ணிரைக் கூட்டிய விசித்திரத்தின் அர்த் தத்தை அப்போதுதான் அவளால் படித்துக் கொள்ள முடிந்தது. அவ்வாசகங்களைத் தேம்பலுடன் எழுதியபோது, ஊற்றெடுத்த கண்ணிரைக் காட்டிலும் பன்மடங்காக இப்போது பெருகிற்று.

அந்தத் தேம்பலைத் தமிழரசியின் மனம் அப்போது “ஒலிப்பதிவு செய்து வைத்திருக்க வேண்டும். இப்போது, அத்தேம்பல் அவளுள் எதிரொலித்துக் காட்டியது. உள் ஒலத்தின் பிரதிபலிப்பு துளிகூட அவளது முகவிலாசத்தில் தடம் காட்டவில்லை. புலன்களைச் சுட்டறுத்து விட்டவள் போல அவள் அந்தக் கணத்தில் காணப்பட்டாள். பலம் வழிந்து, பலவீனம் மிஞ்சிய நம்பிக்கை வறட்சியுடன் அவள் மீண்டும் தன்னைத் தானே நோக்கினுள். கண்களின் கசிவைத் துடைத்துவிடக் காத்திருந்தது அவள் மனம். சுவைப்பதற் காகக் கையில் ஆசையுடன் வைத்திருந்த முறுக்கைப் பருந்து கொத்திச் செல்வதைக் கண்டு குழந்தை ஏமாந்து அழுவதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்?-அவளுக்குத் தன்னைப் பற்றி நினைக்க நினைக்க அவ்வுதாரணம்தான் நினைவு வந்தது. குழந்தைக்கு அழுவதற்காவது பாக்கியம் இருக்கிறது. ஆனால், அவளால் அவ்வாறு அழ முடியாது. தனிப்பாதை யில் போக விரும்பியவளுக்குக் காலொடிந்து போன மாதிரி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/187&oldid=663997" இலிருந்து மீள்விக்கப்பட்டது