பக்கம்:தாய் மண்.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i88

ஏமாற்றம் உண்டாகி விட்டது. அந்த ஏமாற்றத்தை மறக்க, அல்லது மறைக்க அவளால் அழக்கூட முடியவில்லை!

மோகன்தாஸுக்கு இரண்டு தடவை அவள் எழுதிய கடிதப்பிரதிகளையும் டிரங்குப் பெட்டியின் மூலையிலிருந்த கறுப்புக் கூட்டுக்குள் திணித்தாள்.

அடுத்த தடவையாக, இப்போதும் அவள் “தூக்க மாத்திரை’ சளை நினைத்துக் கொண்டாள். மறுகணம், அவளது பகுத்தறியும் சக்தி, அப்பயங்கரமான நினைவைத் தூக்கி எறிந்தது!

“என் வாழ்விலே இனிமேல் என் நிலை என்ன?” -

சுயநலம் மிகுந்த அவளது தன்மயமான ஆய்வு அவளே மிகவும் அச்சப்படுத்தியது. உந்திக் கமலத்தில் தாங்க வொண்ணுத நோவு எழுந்தது. மண்டை வலித்தது. மனம் “அலே எறி கடல் ஆனது. அவள் தவித்தாள், தடுமாறினள், திகைப்புண்டாள். இல்லத் தலைவி திலகவதி அம்மையார் ஓடோடி வந்தாள்- நெஞ்சிலே கைகொடுத்தாள்-நினை விலே!... அந்தத் தாயின் வாழ்க்கை தமிழரசிக்கு நம்பிக்கை ஆனது. துன்பங்களைக் கடந்தும் ஒரு வாழ்க்கை இருப்பதை அவள் அறிவாள்; ஆனல், அவள் அதை இதுவரை மறந்திருந் தாள். இப்போது, அவ்வுண்மை ஞாபகத்திற்கு வந்து விட்டது. சந்திக்கும் துன்பங்களை-சோதிக்கும் சோதனை களை எதிர்த்து வெல்லும் வைராக்கியம் மனத்திற்கு வேள்வி ஆக வேண்டும் என்னும் குறிக்கோளையும் அவள் சித்தத்தில் இருத்தினள். சிரித்தாள். தெய்வமே, உன்னையன்றி நான் இல்லை! நான் உன் குழந்தை. அதல்ைதான் என்னையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டி விடுகிருயா?”

வாழ்க்கைப் பாதையின் புதிய மடக்கத்தில் அவள் இனி மேல் நடக்க வேண்டும். அந்த நீண்ட பெரும் பாதையைக் கூர்த்த மதி பதித்துப் பார்த்தாள். அந்தப் பாதையை வள். அவ்வளவு சுலபமாகக் கணித்துவிட முடியவில்லை.

ல், அந்தப் பாதையின் தொலைவுக் கற்களாக,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/188&oldid=663998" இலிருந்து மீள்விக்கப்பட்டது