பக்கம்:தாய் மண்.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

189

தோன்றாமல் தோன்றிய தனது சமூகப் பணிகளின் உள் ளடக்கத்தை ஒரளவு அவளால் கணிக்க முடிந்தது.

‘என் பிறப்பு புதிராக இருக்கலாம். ஆனால், என் வாழ்க் கையைப் புதுமையானதாக ஆக்கும் சக்தி என்னிடம் இருக் கிறது. என் பிறப்புக்குக் கட்டாயம் பயன் கிடைக்கச் செய் வேன். என் பிறவிப் பயனுக்கு ஒரு அர்த்தம் உண்டாக்கப் பாடு படுவேன். எனக்கு நானே இனி துணை; காப்பு: மனத்தின் மணத்தாலும், இலட்சியங்களின் சத்தியத்தாலும் வாழும் வாழ்வுக்குச் சாவு ஏது? நல்வழி காட்ட எங்கள் அன்னை இருக்கிறார்கள்!”

இவ்வாறு, டைரியின் அன்றைத் தேதியில் எழுதி முடித்துப் பேணுவை மூடினுள் தமிழரசி, தன் அன்பிலும் பணியிலும் பங்கு பெறக் காத்திருந்த ஆயிரக்கணக்கான அளுதைக் குழந்தைகளே-ஏழை எளியவர்களே-நடுத் தெரு தாராயணர்களே அவள் தரிசிக்க முடிந்தது!- மனத்திடை! அவர்களேயெல்லாம் கையேடுத்துத் தொழுது, தன் பிறவியைப் பயனுள்ளதாக்கித் தரும்படி ஆசியை வேண்டிப் பெற்றாள்.

இப்போது, அவள் ஒரு புதிய ரத்த ஓட்டத் துடிப்புடன் எழுந்தாள். மரத்திருந்த கால்களைக் கவனமாக உதறிவிட்டு நடந்தாள். திசைமாறிக் கிடந்த மோகன்தாஸின் மார்பளவுப் படத்தைப் பவித்திரமான அன்புடன் தொட்டு எடுத்து அலமாரியின் மேல் தட்டில் மையம் பார்த்து வைத்தாள். அவள் கைகள் அஞ்சலி முத்திரை பிடித்தன.

மொட்டை மாடிக்கு வந்தாள் அவள். இருளின் பின்னே, மல்லீஸ்வரர் கோயில் கோபுரமும் கலங்கரை விளக்கும் தெரிந்தன.

அன்று தனக்கு வந்திருந்த ஊர்-பேர் இல்லாத கடிதம் இப்போது அவள் முன் விசுவரூபம் எடுத்தது. பசுமரத்தாணி யாக நினைவில் அழுந்திப் பதிந்து விட்டிருந்த அந்த வரிகளின் நிர்த்தாட்சிண்யமான சவாலே அவளால் தாங்க முடியவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/189&oldid=663999" இலிருந்து மீள்விக்கப்பட்டது